“தோனி அடிச்சி ஸ்கோர் உயருதுனா.. சிஎஸ்கே டீம்ல எதோ பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்”.. முன்னாள் வீரர் பரபர கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் தோனிதான் ரன் அடிக்கிறார் என்றால் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி இன்று (31.03.2022) மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன. முன்னதாக நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியைத் தழுவியது. அதனால் இப்போட்டியில் வெற்றி பெற சென்னை அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கடந்த போட்டியில் தோனி அவர் அணிக்கு தேவையான ரன்களை அடித்தார். ஆனால் தோனி அடித்துதான் சென்னை அணியின் ஸ்கோர் உயர்கிறது என்றால் அந்த அணியின் பேட்டிங்கில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

சிஎஸ்கே பேட்டிங் வரிசையில், டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு, சிவம் துபே போன்ற வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் ரன்களை எடுக்க வேண்டும். கடந்த போட்டியில் ஜடேஜா கூட சிறப்பாக விளையாடவில்லை. அதனால் சிஎஸ்கே அணியில் சரிசெய்ய வேண்டிய சில சிக்கல்கள் உள்ளன. மொயின் அலி வந்தது சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயமாக இருக்கும்.

நாம் எப்போதும் சிஎஸ்கே அணியை குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் அவர்கள்தான் அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள். கடந்த 2020-ம் ஆண்டு தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி, அடுத்த ஆண்டே மீண்டு வந்து அசத்தினார்கள். அந்த சீசன் அவர்களுக்கு நன்றாக தொடங்கவில்லை. ஆரம்பத்தில் சில தோல்விகளை சந்தித்தனர். ருதுராஜ் கெய்க்வாட்டை கவனித்தால் கடந்த இரு சீசன்களில் தொடக்க போட்டிகளில் பெரிதாக ரன் அடிக்கவில்லை. ஆனால் போகப்போக அவரின் பேட்டிங் வேகம் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்றாலும், ஆரஞ்சு கோப்பையை பெற்றது ருதுராஜ் கெய்க்வாட் தான்’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்