‘தல’ தோனியே கேப்டனா இருந்தா கூட அந்த டீமால சாம்பியன் ஆக முடியாது.. என்ன இப்படி சொல்லிட்டாரு.. சர்ச்சையை கிளப்பிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனியே கேப்டனாக செயல்பட்டாலும் வங்கதேச அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது என பாகிஸ்தான் வீரர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்
பாகிஸ்தான் நாட்டில் இப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர். இதில் கராச்சி கிங்ஸ் என்ற அணியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வழிநடத்தி வருகிறார். இந்த அணி கடந்த 2020 பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
கராச்சி கிங்ஸ்
ஆனால் நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் கராச்சி கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 8 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதனால் பாபர் அசாமை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாபர் அசாமுக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் குரல் கொடுத்துள்ளார்.
சல்மான் பட்
இதுகுறித்து பேசிய அவர், ‘வங்கதேச அணிக்கு கேப்டனாக தோனியோ அல்லது ரிக்கி பாண்டிங்கோ நியமிக்கப்பட்டால் கூட அந்த அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது. அது போலதான் இதுவும். பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உள்ளார். ஆனாலும் அவருக்கு இந்த சீசனில் சரியான அணி அமையவில்லை. லீக் கிரிக்கெட்டில் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. என்னதான் பலமான திட்டமிடல் இருந்தாலும் சிறந்த ஸ்பெஷலிஸ்ட் அணியில் இல்லை.
பாபர் அசாம்
வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனும் இல்லை. அணியில் இடம் பெற்றுள்ள 11 பேரில் 7-8 பேர் ஆல்ரவுண்டர்கள். அதிலும் இவர்கள் அனைவரும் 6-வது ஆர்டரில் பேட்டிங் செய்து பழகியவர்கள். இவர்கள் திடீரென 4, 5, 6 மற்றும் 7 இடங்களில் வந்து விளையாடுவதுதான் சிக்கலாகி உள்ளது’ என சல்மான் பட் தெரிவித்துள்ளார். பாபர் அசாமுக்கு ஆதரவாக பேசுவதற்காக வங்கதேச அணியை குறைத்து கூறியதற்காக சல்மான் பட்டை வங்கதேச ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அந்த சிஎஸ்கே பிளேயர நாங்க எடுத்தது தான் 'செம' சம்பவம்.." வாய்ப்பு கொடுக்காத தோனி.. தட்டித் தூக்கிய கம்பீர்
- ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' டீம்'ல இந்த 3 பேர் ஆடுனா செமயா இருக்கும்'ல.. சிவகார்த்திகேயன் போட்ட லிஸ்ட்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்
- "பக்காவான பிளான்.. வெறித்தனமான கேப்டன்ஷிப்" - ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிளேயர்..!
- அடுத்தவர் மனைவியை திருமணம் செய்த புகார்.. சிக்கலில் பிரபல கிரிக்கெட் வீரர்!
- என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!
- "சிஸ்கே டீம்க்காக ஆடணும்.. 14 வருஷமா வெயிட் பண்ணும் வீரர்.." இந்த தடவ ஆச்சும் நடக்குமா?.. தோனி முடிவு என்ன?
- "நொந்து நூடுல்ஸா நின்னுட்டு இருந்தேன்.." பக்கத்துல வந்த 'தோனி', கூலா ஒன்னு சொன்னாரு பாருங்க.. சாஹல் சொன்ன ரகசியம்
- தளபதி கம்பீர் Vs தல தோனி.. ஐபிஎல் மெகா ஏலம்.. மல்லுக்கட்ட போகும் பெரிய தலைகள்??.. பின்னணி என்ன?
- தோனி, பிசிசிஐ குறித்து ஒரே interview.. மொத்த பர்னிச்சரையும் உடைத்த ஹர்பஜன் சிங்!
- IPL ஏலத்தில் முதல் பூட்டான் வீரர்??.. Dhoni கொடுத்த 'நச்' அட்வைஸ்.. பட்டையைக் கிளப்புங்க தம்பி