'5 வயசு அதிகமான மாதிரி இருக்கு'.. கலங்கிய கேப்டன்.. மனதை உருக்கும் பேச்சு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த நிலையில், நியூஸிலாந்துடனான தோல்விக்குப் பின்னர், தனக்கு 5 வயதாகிவிட்டது போல் உணர்வதாக, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூ-ப்ளீசிஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
பிர்மிங்ஹாமில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், நியூஸிலாந்துடன் மோதிய தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து அதிரடியாக ஆடி, 241 ரன்களை எடுத்து, நியூஸிலாந்து அணிக்கு 242 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதன் பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி, இன்னும் அதிரடியாக ஆடியதில், 245 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி கொண்டது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும், மோசமான ஃபீல்டிங், மந்தமான பேட்டிங், இன்னும் ரன்களை அதிகப்படுத்தி, இலக்கினை உயர்த்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல காரணிகள், தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கான காரணங்களாக பேசப்பட்டு வருகின்றன. தென் ஆப்பிரிக்கா விளையாண்ட 6 போட்டிகளில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் மழையால் ரத்தானது. 4 போட்டிகளில் தோல்வி அடைந்தது. தற்போது 3 புள்ளிகளுடன் மட்டுமே இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, இனி வரும் 3 போட்டிகளிலும் வென்றால் கூட அரையிறுதிக்குள் நுழைய முடியாத சூழல் உள்ளது.
இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன், டூ-ப்ளீசிஸ், இந்த கடுமையான போட்டிகளில் தோல்வியடைந்ததால், அனைவரும் வேதனையை உணருவதாகவும், அதிக ரன்களை ஸ்கோர் செய்திருக்க வேண்டிய தங்கள் அணியில் இளம் வீரர்கள் இருந்தும் ரன்களைக் குவிக்கத் தவறியதாகவும், எதிரணி சிறப்பான ரன்களை ஸ்கோர் செய்ததாகவும் கூறிய டூ-ப்ளீசிஸ் இந்த தோல்வியால் தனக்கு 5 வயது கூடுதலாகிவிட்டது போன்று உணருவதாகவும், உடலெல்லாம் புண்களாக இருப்பதாகத் தோன்றுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு கேப்டனாக தன்னால் ஒரு அளவுக்குத்தான் அறிவுரை கூற இயலும் என்றும், தன் வீரர்களும் கடுமையாகவே உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கண்ணீருடன் வெளியேறிய ஷிகர் தவான்..’ ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ள உருக்கமான மெசேஜ்..
- 'தல போல வருமா?'.. ஏன்னா கேட்ட கேள்வி அப்படி.. பிசிசிஐ-க்கு சிஎஸ்கே-வின் மரண மாஸ் பதில்!
- ‘இப்படியே கேள்வி கேட்டா எந்திரிச்சு போய்டுவேன்..’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆவேசப்பட்ட கேப்டன்..
- ‘தொடர் தோல்வியால் விரக்தியடைந்த வீரர்கள்..’ ஹோட்டலில் ஃபோட்டோ எடுத்தவர்களுடன் செய்த தகராறால் பரபரப்பு..
- ‘உலகக் கோப்பை போட்டிக்கான ஸ்பெஷல்‘... ‘ரகசியம் உடைத்த இந்திய வீரர்‘!
- ஐய்யோ..! ‘உலகக்கோப்பையில் இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
- 'காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை கொடுங்கள்'... 'பாகிஸ்தான் ரசிகர்களின் வைரல் போட்டோ'... உண்மை என்ன?
- ‘அடப்பாவமே பாகிஸ்தானுக்கு இப்டியொரு சோதனையா’.. ‘கடைசியில இப்டி இறங்கிட்டாங்களே’!
- ‘இவ்ளோ செஞ்சும் அவர தடுக்க முடியலையே’.. ஒரே போட்டியில் உலகளவில் டிரெண்டான இங்கிலாந்து கேப்டன்!
- ‘அற்புதம்’.. இனி புவனேஷ்வர்குமாருக்கு பதில் விளையாட போறது இவர்தானா? .. சூசகமாக சொன்ன கோலி!