‘முதல் பயிற்சி ஆட்டம் ஏமாற்றிய கேப்டன் கோலி’.. தாங்கிப்பிடித்த இரு ஆல்ரவுண்டர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் 30 -ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. அதன்படி இந்திய அணி, நியூஸிலாந்து மற்றும் வங்க தேச அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது.
நியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் இன்று(25.05.2019) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான்(2) மற்றும் ரோஹித் ஷர்மா(2) வந்த வேகத்தில் அவுட்டாகினர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 18 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி நிதானமாக ஆடியது. இதில் தோனி 17 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜடேஜா 54 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பயிற்சியின் போது அடுத்தடுத்து காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்’.. அதிர்ச்சியில் இந்திய அணி!
- ‘கனவு நிஜமாகியிருக்கு..’ நெகிழ்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வைரலாகும் புகைப்படம்..
- ‘எத்தனையோ சேலஞ்ல ஜெயிச்சும் இத மிஸ் பண்ணிட்டாரே’.. வைரலாகும் ‘ஹிட்மேன்’ வீடியோ!
- ‘மிளிரும் கோப்பையுடன், 10 அணிகளின் கேப்டன்கள்’!வெல்லப்போவது யார்? வைரல் வீடியோ!
- 'வேர்ல்டு கப் மேட்சுக்கு டிக்கெட் கிடைக்கலையா?'... 'இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு'... விபரம் உள்ளே!
- உலகக்கோப்பை ஆர்வத்தில் தண்ணீர் ஊற்றி அணைத்த கேப்டன்..? ஏமாற்றத்தில் ரசிகர்கள்..
- 'என்ன பீலிங்கா'...'எனக்கு தாண்டா பீலிங்கு'... 'பிரபல வீரருக்கு நேர்ந்த கதி'...வைரலாகும் வீடியோ!
- 'வந்துட்டோம்.. இனி களத்துல எறங்குறதுதான் பாக்கி'.. உலகக் கோப்பை இந்திய அணியின் வைரல் வீடியோ!
- ‘எங்ககிட்ட இருக்கறது இந்தியாவிடம் இல்லவே இல்லை’.. இந்திய அணியை குறித்து கூறிய இங்கிலாந்து வீரர்!
- ‘உலகக்கோப்பையில எனக்கு நடந்தது மாதிரி விராட் கோலிக்கு நடக்க கூடாது’.. முன்னெச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்!