‘44 வருட கனவு’.. உலகக்கோப்பையில் புது வரலாறு படைக்க போகும் அணி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெல்லும் அணி புது வரலாறு படைக்க உள்ளது.
12 -வது சீசன் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று(14.07.2019) லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி பெரும் அணி உலக்கோப்பையில் 44 வருட கனவை நிறைவேற்றி சாதனை படைக்க உள்ளது. இதில் நியூஸிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2015 -ம் ஆண்டு உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. அதேபோல் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்வது இது 4 -வது முறையாகும். முன்னதாக 1979, 1987 மற்றும் 1992 -ம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. ஆனால் ஒருமுறை கூட கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணி, 44 வருடம் கழித்து முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று புதிய வரலாறு படைக்க உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இவர் தான் கெத்து'... 'அது மட்டும் நடக்காம இருந்திருந்தா'...'இப்ப சீனே வேற '... இந்திய வீரரை புகழ்ந்த பிரபல வீரர்!
- 'நடுவர்களை அறிவித்த ஐசிசி'... 'செம கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்'... அப்படி என்ன தான் பண்ணுனாரு?
- ‘அத நெனச்சு நைட் எல்லாம் சரியா தூங்கவேயில்ல’.. இந்திய வீரர் குறித்து கூறிய ராஸ் டெய்லர்..!
- ‘என்னுடைய இதயம் கனமாக உள்ளது’... ‘கோப்பை கனவை தகர்த்த அந்த 30 நிமிடங்கள்'... 'ட்விட்டரில் உருகிய வீரர்'!
- 'இந்திய அணி அங்கிருந்து திரும்பி வரட்டும்'.. 'செமி ஃபைனல் குறித்து கேக்கப் போறோம்'!
- ‘இது ரொம்ப ஓவர்' .. 'ஆனாலும் ஜெயிச்சுட்டோம்னு இப்டியா பண்ணுவீங்க?’.. வீரர்களின் ட்விட்டர் சண்டை!
- 'தோனிய ஏன் 7-வதா எறக்குனீங்க?'..'.. ஏகோபித்த ரசிகர்களின் கேள்விக்கு ரவி சாஸ்திரியின் பதில் இதுதான்!
- 'வேண்டாம் 'தல'...'இத மட்டும் பண்ணாதீங்க'... 'உருகும் ரசிகர்கள்'... அடுத்த தொடரில் பங்கேற்பாரா?
- 'இன்னும் டிக்கெட் போடல'... 'இங்கிலாந்தில் இருக்க போகும் வீரர்கள்'... இதுதான் காரணம்!
- ‘யாரும் நெருங்காத ஆஸ்திரேலிய வீரரின் சாதனை’.. 12 வருடம் கழித்து முறியடித்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்..!