"கோலி சீண்டுவாரு... நான் மட்டும் சும்மா இருக்கணுமா"!?.. "இருந்தாலும் சொல்றேன்"... பழைய பகை மறந்து... டிம் பெய்ன் சொன்ன வார்த்தை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என்று ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சச்சின், கங்குலி காலத்தில் தான் இந்திய அணி உலக அரங்கில் அனைத்து சர்வதேச அணிகளையும் வீழ்த்தும் வல்லமை பெற்ற அணியாக வலம் வந்தது. ஆனால், அந்த வெற்றியில் தொடர்ந்து நீடிக்கவில்லை.
தோனி கேப்டனான பிறகு, இந்திய அணிக்கு நீடித்த நிலையான வெற்றிகள் கிடைக்கத் தொடங்கின. எனினும், ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது என்பது இந்திய அணியின் பெருங்கனவாக இருந்தது. அது, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சாத்தியமானது.
2018-19ல் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 - 1 என்று வெற்றிப் பெற்று சரித்திரம் படைத்தது. அதேபோல், 2020-21 தொடரிலும், 2-1 என்று இந்தியா தொடரை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இதில், இந்தியா தோல்வி அடைந்த முதல் போட்டியைத் தவிர்த்து, மீதமிருந்த 3 போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. கோலி சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இவ்விரு டெஸ்ட் தொடர்களுக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தது டிம் பெய்ன். அவர் விராட் கோலி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட் கோலியைப் பொறுத்தவரை, நான் பலமுறை கூறியுள்ளேன். உங்கள் அணியில் அவரைப் போன்ற ஒரு வீரர் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள். அவர் கடும் சவால் அளிக்கக் கூடியவர், உலகின் சிறந்த பேட்ஸ்மேனும் கூட. அவருக்கு எதிராக விளையாடுவது சவாலானது. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. எனினும், நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் வீரர் அவர் என்றார்.
கடந்த 2018-19 சீசனில் பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, கோலி - பெய்ன் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அவர்கள் பேசியது மைக்கில் கூட பதிவானது. இரு அணி கேப்டன்களும், விக்கெட்டுகள் விழும் போது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இதுகுறித்து பெய்ன் மேலும் கூறுகையில், கோலி எங்கள் வீரர்கள் அவுட்டாகி செல்லும் போது, ஆக்ரோஷமாக அவர்களை அனுப்பிவைத்தார். இதனால் நான், எனது அணியினருக்காக நிற்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் இந்திய வீரர்கள் அவுட்டாகும் போது, இது என் முறை, இப்போது நான் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன் என்று பெர்த் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சும்மா 'டைம் பாஸ்' பண்றதுக்காக ஏதாவது சொல்லுவாரு...' 'வாகனை சீண்டிய முன்னாள் வீரர்...' ஹலோ 'அந்த விஷயத்துல' சிக்கியது நியாபகம் இருக்கா...? - பதிலுக்கு பொளந்து கட்டிய வாகன்...!
- ‘பேட்டியில் உண்மையை உளறிய வீரர்’!.. மீண்டும் ‘பூதாகரமாக’ வெடித்த பந்தை சேதப்படுத்திய விவகாரம்.. விசாரணை வலையத்துக்குள் சிக்கும் ‘பெரிய’ தலைகள்..!
- "எத்தனை காலத்துக்கு நான் விளையாடிட்டே இருக்க முடியும்"?.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நேரத்தில்... ஷாக் கொடுத்த ஷமி!
- ‘அவரை பத்தி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?’.. கோலியை சீண்டிய வாகனுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த பதிலடி..!
- '5 வருட பார்ட்னர்ஷிப்'... 'திருமண நாளை கொண்டாடிய கிரிக்கெட் பிரபலம்'... வெளியான மனைவியுடன் இருக்கும் கியூட் போட்டோ!
- VIDEO: அடேங்கப்பா..! தோனிக்கு முன்னாடியே இவர் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் அடிச்சிருக்காரே.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ.. யார் அந்த வீரர்..?
- ‘புதிய கிரிக்கெட் தொடர்’!.. லிஸ்டில் இருக்கும் தினேஷ் கார்த்திக் பெயர்.. ஆனா இந்த முறை விளையாட இல்லை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
- 'இது கிரிக்கெட் டீமா?.. இல்ல...ஆர்மியா'?.. இந்திய வீரர்களை வெளுத்து வாங்கும் பிசிசிஐ!.. திணறடிக்கும் புது ரூல்ஸ்!!
- 2020ல் 'டம்மி'யாக இருந்த சிஎஸ்கே... 2021ல் 'கில்லி'யாக மாறியது எப்படி?.. சிக்கலான விஷயம்... சிம்பிளாக முடித்த தோனி!
- 'பெரிய சதி நடக்குது!.. ஒருத்தரையும் விடமாட்டேன்'!.. கங்குலி, டிராவிடுக்கு... முன்னாள் பயிற்சியாளர் பகீர் கடிதம்!