'மாஸ்டர்?.. இத நீங்க கவனிக்கலயே?'.. வம்பிழுத்த ஐசிசி.. வைரல் பதில் அளித்த சச்சின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்பு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது சிறுவயது நண்பரான வினோத் காம்ப்ளியுடன் இணைந்து டெண்டுல்கர் மிடில்செக்ஸ் கிரிக்கெட் என்றொரு அகாடமியை நடத்தி வருகிறார். 

தன்னைப் போன்று கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலாய் இந்த அகாடமியை நடத்தி வருகிறார் சச்சின்.

இந்த சூழலில், வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சச்சின் டெண்டுல்கரின் ஒரு வீடியோ வெளியானது. அதனூடே சச்சின் ஒரு பதிவினையும் இட்டிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு காம்ப்ளியுடன் விளையாடுவதாகவும், சிறு வயதிலிருந்தே ஒன்றாக விளையாடிய தங்கள் இருவருமே ஒரே அணியில் விளையாண்டவர்கள் என்பது பலருக்கும் தெரியாது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவில், காம்ப்ளிக்கு பவுலிங் போடும்போது சச்சின், பவுலரின் லைனைத் தாண்டி பந்து வீசினார். அதை சுட்டிக்காட்டி ட்வீட் செய்த ஐசிசி, அந்த புகைப்படத்தையும் அதன் அருகில் அம்பயர் ஸ்டீவ் பக்னர் நோ பால் காட்டும் புகைப்படத்தையும் பதிவிட்டு கலாய்த்துள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு நிறைய முறை ஸ்டீவ் பக்னர் கொடுத்த சிக்னல்களால் வாய்க்கால் தகராறு ஏறட்டதை கிரிக்கெட் உலகமே அறியும். இந்திய அணியின் பல தொடர்கள் ஸ்டீவ் பக்னரின் தவறான முடிவால் திசைமாறிய வரலாறுகளும் உள்ளதாகக் கூறுவர். இந்த நிலையில், ஐசிசியின் ட்வீட்டுக்கு மாஸ்டர் பிளாஸ்டர், இந்த முறை, தான் பேட்டிங் செய்யாமல் பவுலிங் செய்ததாகவும் நடுவரின் முடிவே இறுதியானது என்றும் ரி-ட்வீட் செய்துள்ளார்.

SACHINTENDULKAR, ICC, CRICKET, VIRAL, FUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்