T20 WORLD CUP: இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா? ஒரு வேளை நடந்துருமோ? முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்கி உள்ளது .

T20 WORLD CUP: இந்தியா vs பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இப்படி ஒரு சிக்கல் இருக்கா? ஒரு வேளை நடந்துருமோ? முழு தகவல்
Advertising
>
Advertising

சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது மற்றும் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய தேசிய கிரிக்கெட் அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியுடன் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றனர்.

ICC T20 World Cup India vs Pakistan Rain likely to play

மெல்போர்னில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி  மழையால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மைய தகவலின் படி MCG-யில் போட்டி நடைபெறும் நாளில் மழை அச்சுறுத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.  “அதிக (80%) மழைக்கான வாய்ப்பு, பெரும்பாலும் மாலை நேரத்தில் மெல்போர்னுக்கு தென்கிழக்கு திசையில் மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் மழையுடன் காற்று வீசும்‌" எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெல்போர்னில் நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி மட்டும் மழையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை. சிட்னியில் நடக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மோதும் போட்டியும் மழையால் பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, சிட்னியில், “மிக அதிகமாக (90%) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, பெரும்பாலும் மதியம் மற்றும் மாலை நேரங்களில். இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CRICKET, ICCWORLDCUP, ICC, ICC T20 WORLD CUP INDIA VS PAKISTAN, ICC T20 WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்