‘டி20 தொடரை கைப்பற்றிய கையோடு’... ‘ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இரு வீரர்கள்’... ‘ஆனால் இதுல யாருமே இடம்பெறல’... ‘வெளியான தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான  புள்ளிகள் பட்டியலில் இந்திய வீரர்கள் இருவர், ஒரு இடம் முன்னேற்றமடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதிய டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. குறைந்த ஓவர்கள் வடிவத்தில் குறிப்பாக, டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி தன்னுடைய பேட்டிங் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல்லிலும், 14 போட்டிகளில் 670 ரன்கள் இவர் குவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்துள்ள டி20 தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து 81 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டி20 போட்டிகளின் புள்ளிகள் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்திற்கு தாவியுள்ளார் கே.எல்.ராகுல். 816 புள்ளிகளுடன் இவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது போட்டியில் 85 ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

காயமடைந்துள்ள ரோகித் சர்மா புள்ளிகளில் பின்தங்கி 14-வது இடத்தையும், ஷிகர் தவான் 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 915 புள்ளிகளுடன் டேவிட் மலன் முதல் இடத்திலும், 871 புள்ளிகளுடன் பாபர் அசாம் இரண்டாம் இடத்தையும் நிறைவு செய்துள்ளனர்.

பந்துவீச்சில் முதல் 10 இடங்களில் இந்திய அணியைச் சேர்ந்த ஒருவரும் இல்லை. ஆஃப்கானிஸ்தானைத் சேர்ந்த ரஷீத்கான் 736 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், அதே நாட்டைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 730 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்