‘Picture perfect’- ஐசிசி பாராட்டும் வகையில் என்ன செஞ்சிட்டாரு நம்ம அஷ்வின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே இது என்பதால், போட்டியை வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதன் மூலம் ஆண்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது இந்தியா.

Advertising
>
Advertising

இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சுழற்பந்து வீச்சாளரும், நட்சத்திர ஆல் ரவுண்டருமான ரவிச்சந்திரன் அஷ்வின்.

ஆட்டத்தின் முதல் மற்றும்† இன்னிங்ஸ்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் டெஸ்ட்டிலும் அஷ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரின் அசத்தலான பந்து வீச்சு காரணமாக தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இது அஷ்வின் வாங்கும் 9 வது தொடர் நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் மிகச் சிலரே இத்தனை தொடர் நாயகன் விருதகளை வாங்கிக் குவித்து உள்ளனர்.

இந்நிலையில் அஷ்வின் செய்த காரியம் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி-யும் ‘அங்கீகாரம்’ கொடுத்துள்ளது.

இந்த தொடரைப் பொறுத்தவரை, இது சுழற் பந்து வீச்சாளர்களுக்கான தொடராகவே அமைந்துவிட்டது. இன்றைய போட்டி முடிந்தவுடன் இந்தியாவின் அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா மற்றும் நியூசிலாந்தின் அஜாஸ் படேல் மற்றும் ரச்சின் ரவிந்திரா ஆகியோரை ஒரு லைனில் நிற்க வைத்து அஷ்வின் வித்தியாசமான முறையில் புகைப்படம் ஒன்றை கிளிக் செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், ‘அக்சர்’ ‘படேல்’ ‘ரவிந்திர’ ‘ஜடேஜா’ என்று இருந்தது. இது இந்திய அணியின் இரு வீரர்களை சூசகமாக குறிப்பது போல இருந்தது. இந்தப் படத்தைத் தான் ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்தப் படத்தைப் பலரும் லைக் செய்தும், ரி ட்வீட் செய்தும் வருகின்றனர்.

அஷ்வினைப் பொறுத்தவரை, களத்தில் அவர் எப்படி கலக்கினாலும் களத்துக்கு வெளியில் எப்போதுமே ஒரு சிறிய குழந்தை போலவே நடந்து கொள்வார். எப்போதும் போட்டியோ, தொடரோ முடிவடைந்த பின்னர் அஷ்வின், இதைப் போன்ற சேட்டைகளில் ஈடுபடுவது, அணியின் சக வீரர்களை கேலி செய்வது, அனைவரிடத்திலும் ஆர்வத்துடன் பேசுவது என்று தன்னை பிஸியாக வைத்துக் கொள்வார்.

அவர் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய யூ டியூப் சேனலிலும் இதையே ஃபாலோ செய்து வருகிறார். கிரிக்கெட் சார்ந்து மட்டும் அதில் பேசாமல், கிரிக்கெட்டுக்கு வெளியில் பல விஷயங்களை பேசியும் உரையாடியும் வருகிறார் அஷ்வின். இதனால் அவருக்கு ரசிகர்கள் வட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

CRICKET, ICC, RASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்