‘சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐசிசி..’ இறுதியாக அளித்துள்ள விளக்கம்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட ஓவர் த்ரோ சர்ச்சைக்கு ஐசிசி இறுதியாக விளக்கமளித்துள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் போட்டி ட்ரா ஆனது. இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் ஒரே ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் ட்ரா ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்தை அடித்த பென் ஸ்டோக்ஸ் 2வது ரன் எடுக்க ஓடினார். அப்போது அவரை ரன் அவுட் செய்யும் நோக்கத்துடன் நியூசிலாந்தின் கப்தில் பந்தை த்ரோ செய்ய அது ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதற்கு நடுவர்கள் 6 ரன்கள் கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை குறித்து இறுதியாக ஐசிசி தரப்பிலிருந்து தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ஐசிசி செய்தித் தொடர்பாளர், “போட்டியில் ஐசிசி விதிகளின் படி எந்தவொரு முடிவையும் களத்தில் உள்ள நடுவர்களே எடுப்பார்கள். நடுவர்களின் முடிவில் இதுபோன்ற எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுக்கப்பட்டது நடுவர்களின் தெளிவான குழப்பம், 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டுமென சர்வதேச முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஐசிசி உலகக் கோப்பை அணி பட்டியல்’... ‘இடம் பிடித்த இரு இந்திய வீரர்கள்’!
- ‘ஓவர் த்ரோவில் இங்கிலாந்து அணிக்கு’... ‘6 ரன்கள் கொடுத்தது தவறு’... ‘பிரபல அம்பயர் கருத்து’!
- 'தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி'... 'பும்ராவின் வைரல் ட்வீட்'!
- 5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’
- ‘ஐசிசி-யை விளாசித் தள்ளிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்..’ ட்விட்டரில் ட்ரெண்டாகும் #ICCRules..
- 'இவங்க ரெண்டு பேருக்கும் சண்டையா'?...'வெடிக்கும் புதிய பிரச்சனை'... முக்கிய முடிவெடுக்கும் பிசிசிஐ!
- உண்மையாவா? அது எனக்கா?.. ஆச்சரியப்பட்ட வில்லியம்சன்.. வைரலாகும் வீடியோ..!
- உலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல?’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'!
- 'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘தொடர்ந்து என்ன இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருக்காரு’.. வில்லியம்சனை பாராட்டி ட்வீட் செய்த பிரபல வீரர்..!