"நம்பர் 1 Umpire-அ ரவுண்டு வந்தவரு, இப்போ.." தலைகீழாக மாறிய பாகிஸ்தான் நடுவரின் வாழ்க்கை.. வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில், வீரர்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ, அதே போல சில நடுவர்களும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் புகழ் பெற்று விளங்குவார்கள்.

Advertising
>
Advertising

அந்த வகையில் சைமன் டாஃபல், பில்லி பவுடன், டேவிட் ஷெப்பர்ட், அலீம் தார் என பலரைச் சொல்லலாம். அதே வரிசையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரவூஃப் என்பவரும் நடுவராக இருந்த போது சிறந்த நடுவராக கருதப்பட்டு வந்தார்.

ஐசிசி எலைட் பேனலில் அங்கம் வகித்து இருந்ததும் அவரது திறமைக்கு ஒரு சான்றாக இருந்தது. ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறியது.

தலைகீழாக மாறிய வாழ்க்கை

ஐபிஎல் தொடரில் ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாக ஆசாத் ரவூஃப் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு சில ஆண்டுகள் தடையும் விதித்திருந்தது. சிறந்த நடுவர் ஒருவர் மீது, இப்படி புகார் எழுந்திருந்த சம்பவம், அந்த சமயத்தில் கடும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.

இதன் பின்னர், ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஆசாத் ரவூஃப்பின் வாழ்க்கை, தற்போது அப்படியே திசை மாறி வேறு ஒரு பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது. 66 வயதாகும் ஆசாத், பாகிஸ்தானின் லாக்கூர் லந்தா பஸார் பகுதியில் ஒரு சிறிய ஷூக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

"எனக்காக இத பண்ணல.."

கிரிக்கெட்டை தற்போது பெரிய அளவில் மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆசாத் ரவூஃப், "கிரிக்கெட்டுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை கூட நான் தற்போது நிறுத்திவிட்டேன். ஏனென்றால் ஒன்றை விட்டு விட்டால், அதிலிருந்து முழுமையாக வந்துவிட வேண்டும் என்பது தான் என்னுடைய கொள்கை.

இந்த கடையைக் கூட, இங்கே வேலை பார்க்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்திற்காக தான் நடத்தி வருகிறேன். எனக்கு பேராசை ஒன்றும் கிடையாது. நான் நிறைய பணம் பார்த்து விட்டேன். ஒரு மகன் மாற்றுத்திறனாளி. மற்றொரு மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். நான் தினமும் ஐந்து முறை நமாஸ் செய்கிறேன்.

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் ஊழலுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. பிசிசிஐ என் மீது குற்றம் சாட்டியது. பிறகு அவர்களே எனக்கு ஐந்தாண்டுகள் தடையும் விதித்தார்கள்" என ஆசாத் ரவூஃப் தெரிவித்துள்ளார்.

ASAD RAUF, UMPIRE, BCCI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்