"இனிமே மன்கட் இல்ல, அதுக்கு பதிலா".. ICC கொண்டு வந்த புதிய ரூல்ஸ்.. "ஒவ்வொண்ணும் Gun மாதிரி இருக்கே"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி 20 உலக கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) பல புதிய விதிமுறைகளை தற்போது அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "அடேங்கப்பா.. 71 வயசுல இப்டி ஒரு திறமையா?".. இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்ச வேற லெவல் பாட்டி!!

மன்கட் அவுட் தொடங்கி, பேட்ஸ்மேன் களத்தில் வரும் நேரம் உள்ளிட்ட பல விஷயங்களில் புதிய விதிகளை ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இந்த புது விதிகள் அனைத்தும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீசும் போது அதனை வீரர்கள் எச்சில் கொண்டு பாலிஷ் செய்யும் பழக்கம், கொரோனா காலத்தில் இருந்து தடை செய்யப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், இந்த தடையை நிரந்தரமாகவும் மாற்றி உள்ளது ஐசிசி. இனிமேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எந்த வீரரும் தங்களின் எச்சில் கொண்டு பந்தை பாலிஷ் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் எடுக்கப்பட்டு ஆட்டமிழக்கும் பட்சத்தில், அவர் ரன் ஓடி நான் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கோ அல்லது பகுதி பிட்ச்சை கடந்திருந்தாலோ புதிதாக வரும் பேட்ஸ்மேனும் நான் ஸ்டரைக்கர் பகுதிக்கு செல்லாமல் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு தான் செல்ல வேண்டும்.

அதே போல, களத்தில் இறங்கும் புதிய பேட்ஸ்மேன், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 2 நிமிடங்களுக்குள் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு வந்து பேட்டிங் செய்ய தயாராக வேண்டும். டி 20 போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து விட்டால், அடுத்து வரும் பேட்ஸ்மேன் 90 வினாடிகளுக்குள் பேட்டிங் செய்ய தயாராகி விட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நான் ஸ்ட்ரைக்கர் பகுதியில் இருக்கும் பேட்ஸ்மேனை மன்கட் முறையில் அவுட் செய்வது என்பது ஐசிசி விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது தான். முன்னதாக, இந்த மன்கட் அவுட் முறை பல்வேறு சர்ச்சை மற்றும் விவாதங்களை கிரிக்கெட் வட்டாரத்தில் உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்கையில், இனிமேல் மன்கட் அவுட் முறை என்பது ரன் அவுட்டாக கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேட்ஸ்மேனை ஒரு பந்து பிட்ச்சை விட்டு நகர செய்யும் பட்சத்தில், அது டெட் பால் என அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பந்து வீச்சாளர் பந்து வீச தொடங்கி விட்டாலே, களத்தில் உள்ள ஃபீல்டர்கள் அனைவரும் தாங்கள் நிற்கும் இடத்தில இருந்து நகரக் கூடாது. அப்படி பேட்ஸ்மேனை திசை திருப்பும் வகையில் நடந்து கொள்ள ஃபீல்டர்கள் முயற்சித்தால், 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டு அதனை எதிரணிக்கு நடுவர் வழங்கலாம். அந்த பந்தையும் டெட் பால் என அறிவிக்கலாம்.

ஒரு பவுலர் பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறி வந்தால் பவுலர்கள் பந்தை வீசுவதற்கு முன்பாக த்ரோ செய்து ரன் அவுட் செய்ய முயற்சி செய்யலாம். ஆனால், இனிமேல் அப்படி செய்தால் அது டெட் பாலாக கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல விதிமுறைகள் புதிதாக அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கிரிக்கெட் ரசிகர்களும் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற நபர்.. திடீர்ன்னு செய்ய நெனச்ச காரியம்.. அருகே நின்றவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

CRICKET, ICC, ICC NEW RULES, INTERNATIONAL CRICKET, MANKAD RULES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்