இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல.. இந்த தொடர் முழுவதும் நடந்த ‘ஒரே’ சம்பவம்.. ஐசிசியை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஐசிசியை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 172 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் (Sunil Gavaskar), ஐக்கிய அரபு அமீரக மைதானங்கள் தொடர்பாக ஐசிசியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இங்குள்ள மைதானங்களில் பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் டாஸ் வெற்றி பெரும் ஒவ்வொரு அணியும், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குறிப்பாக துபாய் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெறவே இல்லை.

இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘இந்த டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டியிலும் இதேதான் நடந்துள்ளது. இதுபோன்ற பெரிய தொடர்களில் மைதானம் சமநிலையுடன் இருப்பதை ஐசிசி உறுதி செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்று போராடும் போது மைதானங்கள் இதுபோல் இருக்கக்கூடாது. மைதானங்களின் தன்மையை முன்கூட்டியே ஐசிசி கவனித்திருக்க வேண்டும். இரண்டாவது பேட்டிங் செய்த அணிக்கே அனைத்து மைதானங்களும் ஒத்துழைத்தது சரியான முடிவு கிடையாது’ என சுனில் கவாஸ்கர் காட்டமாக கூறியுள்ளார்.

ICC, SUNILGAVASKAR, T20WORLDCUP, UAE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்