‘ஆரம்பமே அதகளம் தான் போல’.. வெளியானது டி20 உலகக்கோப்பை அட்டவணை.. இந்தியாவுக்கு முதல் மேட்ச் யார் கூட தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. முதலில் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக்கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன. மற்ற 4 அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.

இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே ஐசிசி வெளியிட்டது. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன. குரூப் 2-வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

தகுதி சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஓமன், பப்புவா நியூ கினி, இலங்கை, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் தகுதிப்பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும். சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டி அக்டோபர் 23-இல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இப்போட்டி வரும் அக்டோபர் 24-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இது இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்