வெளியானது இந்த வருட T20 உலககோப்பை போட்டி அட்டவணை.. இந்தியாக்கு வாய்ப்பிருக்கா? யார் யார் கூட மேட்ச் இருக்கு? முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா: 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

2022ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகின்றன. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த உலககோப்பை தொடர், வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை இந்த உலககோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது.  ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான அடிலெய்டு (OVAL) , பிரிஸ்பேன் (GABBA), ஹோபார்ட், மெல்போர்ன் (MCG), பெர்த் (opus) மற்றும் சிட்னி (SCG) உள்ளிட்ட இடங்களிலும், கீலாங் நகரிலும் உலககோப்பை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பிரதான முக்கிய போட்டிகள் கீலாங் மைதானத்தில் நடைபெறாது.

நவம்பர் 9 அன்று முதல் அரையிறுதிப்போட்டியும் நவம்பர் 10 அன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதி சிட்னி மைதானத்திலும், இரண்டாவது அரையிருதி அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதிகாலையில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்.. கதவைத் திறந்து பார்த்ததும்.. அரண்டு போன ஊர் மக்கள்

 

இந்த உலககோப்பை தொடருக்கு முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா,ஆப்கானிஸ்தான், வங்காளதேச கிரிக்கெட் அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. இரண்டாம் தர அணிகளான நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இன்னும் சில அணிகள் தகுதிச் சுற்றுகளில் விளையாடி பின்னர் பிரதான சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் 1ல் இடம் பெற்றுள்ளன, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் 2 வில் உள்ளன. அக்டோபர் 22 சனிக்கிழமையன்று நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து எதிர்கொள்ளும் நிலையில், 2021 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையிலான இந்த மோதலுடன் சூப்பர் 12 போட்டிகள் சிட்னியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத எல்லாம் பக்காவா செஞ்சாலே போதும்.. இந்தியா மேட்ச் ஜெயிச்ச மாதிரி தான்.. முழு விவரம் உள்ளே

 

இந்திய அணி விளையாடும் போட்டிகள் விவரம்

India vs Pakistan: அக்டோபர் 23 (ஞாயிறு)
India vs Group A runners-up: அக்டோபர் 27 (புதன்)
India vs South Africa: அக்டோபர் 30 (ஞாயிறு)
India vs Bangladesh: நவம்பர் 02 (புதன்)
India vs Group B winners: நவம்பர் 06 (ஞாயிறு)

இந்த உலககோப்பை போட்டியில் இந்திய அணி முதல்முறையாக ரொகித் சர்மா தலைமையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

WORLD CUP, T20 WORLD CUP MATCHES LIST, WORLD CUP 2022 T20, T20 உலககோப்பை, இந்திய அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்