‘இனி அந்த வார்த்தையை யூஸ் பண்ணக்கூடாது’!.. தடை போட்ட ஐசிசி.. நடுவுல ‘ஒரு’ வார்த்தையை தூக்கிய கெய்ல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யுனிவர்ஸ் பாஸ் என்ற பெயரை பயன்படுத்த கிறிஸ் கெயிலுக்கு ஐசிசி தடை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இதில் 3-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் 67 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற பெயரை பயன்படுத்த கிறிஸ் கெயிலுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், ‘என்னுடைய குறிக்கோள் டி20 உலகக்கோப்பை தொடர்தான். நான் ரன்களை பற்றி கவலைப்படுவதில்லை. கெய்ல் ரன் அடிக்கமாட்டார், அவருக்கு 42 வயதாக போகிறது என வர்ணனையாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கெய்ல் மைதானத்துக்குள் வந்தாலே ரசிகர்கள் உற்சாகம் அடைகின்றனர்.

‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். நான் என்னுடைய பேட்டில் ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஐசிசி விரும்பவில்லை. என்னுடைய கிரிக்கெட் பயணம் மிகப்பெரியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை நாங்கள் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. கேப்டன் நிக்கோலஸ் பூரணுக்கு துணையாக இருந்து இந்த தொடரை வென்று கொடுத்துள்ளேன்’ என கெய்ல் கூறியுள்ளார். தற்போது ‘The Universe Boss'  என்பதை ‘The Boss’ என மாற்றி கெய்ல் தனது பேட்டில் பதித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கெய்ல், ‘அதேபோல் பொல்லார்டு விளையாடாவிட்டாலும், அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி வருகிறார். நான் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வந்தது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போட்டியில் அரைசதம் அடித்திருக்கிறேன். இதை பொல்லார்டுக்கும், என் அணியினருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இந்த போட்டிக்கு முன்பாக அணியில் ஒரு மீட்டிங் நடத்தப்பட்டது. அப்போதுதான் அணியில் நான் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறேன் என்பது தெரிந்தது. அப்போது என்னுடைய கருத்தைத் தெரிவிக்க பொல்லார்டு கூறினார். எனக்கு உற்சாகம் அளிக்கூடிய வகையில் பேசிய பொல்லார்டுக்கு நன்றி.

சில நேரங்களில் நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் என்பது முக்கியம் இல்லை, உற்சாகமாக இருக்க சில வார்த்தைகள்தான் தேவை. சீனியர் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அவர்களின் வலிமை, ஒற்றுமையால்தான் தொடரை வெல்ல முடிந்தது. இளம் வீரர்களுடன் சேர்ந்து விளையாடியது மகிழ்ச்சியான தருணம்’ என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்