‘உலக கோப்பைக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா’?.. பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 30ம் தேதி தொடங்கும் இந்த போட்டி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், உலககோப்பை போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து 82 ஆயிரம் (ஒரு கோடி அமெரிக்க டாலர்) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உலக கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராக (ரூ. 70,12,82,000) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 28,05,128) பரிசாக வழங்கப்படும். இதையடுத்து, 2-வதாக இடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் டாலர்கள் (ரூ. 14,02,56,400) வழங்கப்படும்.

மேலும், அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 5,61,02,560) வழங்கப்படும். இந்நிலையில், லீக் போட்டிகளில் வெற்றியடையும் ஒவ்வொரு போட்டிக்கும்  40 ஆயிரம் டாலர்கள் (ரூ. 28,05,128) பரிசு வழங்கப்படுகிறது. மேலும், லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர்கள்(ரூ. 70,12,820) பரிசு வழங்கப்படுகிறது.

ICC, ICCWORLDCUP2019, PRICE MONEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்