‘கொரோனா காரணமாகதான் அவங்களை நியமிக்கல’!.. WTC final-க்கு எலைட் குழு அம்பயர்கள்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அம்பயர்களை நியமித்து ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ம் தேதி தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள், தற்போது அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அம்பயர்களை ஐசிசி நியமித்துள்ளது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் ஆகியோர் கள அம்பயர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இரு அம்பயர்களும் ஐசிசியின் எலைட் குழுவில் இருப்பவர்கள். இதில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் 53 டெஸ்ட் போட்டிகளிலும், மைக்கல் கோஃப் 19 டெஸ்ட் போட்டிகளில் அம்பயர்களாக பணியாற்றியுள்ளனர். மேலும் இப்போட்டியின் ரெஃப்ரியாக கிறிஸ் பிராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து அம்பயர்களை நியமிக்கவில்லை என்றும், அதனால்தான் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அம்பயர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி விளக்கமளித்துள்ளது. இந்த அம்பயர்கள் பயோ பபுள் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்படுவார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்