‘யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு’!.. அப்போ பல வருசம் கழிச்சு ‘மறுபடியும்’ பாகிஸ்தானுக்கு விளையாடப் போகிறதா இந்தியா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி தொடர்களை நடத்தவுள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

வரும் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸும், அமெரிக்காவும் இணைந்து நடத்துகின்றன. இதில் முதல்முறையாக அமெரிக்கா உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனை அடுத்து வரும் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.

இதனைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. மேலும் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நம்பீயா ஆகிய அணிகள் இணைந்து நடத்துகின்றன.

வரும் 2028-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதனைத் தொடர்ந்து 2029-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நடத்துகிறது. இதனை அடுத்து 2030-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இதனைத் தொடர்ந்து வரும் 2031-ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் இந்தியா மொத்தமாக 3 ஐசிசி தொடர்களை நடத்துகிறது. இதில் வரும் 2025-ம் ஆண்டு பாகிஸ்தான் நடத்தவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்தியா கடைசியாக 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதேபோல் பாகிஸ்தானும் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதனை அடுத்து இரு நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக, இரண்டு அணிகளும் கிரிக்கெட் தொடர்களில் மோதிக்கொள்ளவே இல்லை.

உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. அதுவும் இரு நாடுகளுக்கும் பொதுவான நாட்டில்தான் அந்த தொடர்களும் நடத்தப்படுகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தவுள்ளது. அதனால் அரசியல் சிக்கல்களைக் கடந்து, மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று போட்டிகளில் இந்தியா விளையாடுமா? என கேள்வி எழுந்துள்ளது.

ICC, BCCI, PAKISTAN, INDVPAK, CHAMPIONSTROPHY, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்