‘இதுக்கு பேரு உலகின் சிறந்த டி20 அணியா?’...‘இது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணி’... ‘ஐசிசியை பயங்கரமாக கலாய்த்து’... ‘கடுமையாக சாடிய முன்னாள் வீரர்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி அறிவித்தது சிறந்த டி20 அணி அல்ல, ஐபிஎல் அணி என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் விளாசியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த டி20, ஒருநாள், டெஸ்ட் அணியை ஐசிசி வெளியிட்டது. இந்த 3 பிரிவுகளிலும் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட இல்லை. அதேபோல மகளிருக்கான பிரிவிலும் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் கூட இல்லை. ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு தோனிதான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
மேலும், இந்திய வீரர்கள் பும்ரா, ரோஹித் சர்மா, அஸ்வின், தோனி, கோலி ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரரும், ராவல்பின்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் சோயப் அக்தர் அதிருப்தி தெரிவித்து கூறியிருப்பதாவது, ‘பாகிஸ்தான் அணி ஐசிசியில்தான் இருக்கிறது, அவர்களும் டி20 போட்டி விளையாடுகிறார்கள் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.
ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாபர் ஆஸமை ஐசிசி சிறந்த டி20 அணியில் தேர்வு செய்யவில்லை. பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரு வீரரைக் கூட எந்த பிரிவுக்கும் ஐசிசி தேர்வு செய்யவில்லை. எங்களுக்கு ஒன்றும் ஐசிசியின் கடந்த 10 ஆண்டு டி20 அணி தேவையி்ல்லை. ஐசிசி அறிவித்திருப்பது 10 ஆண்டுக்கான சிறந்த டி20 அணி அல்ல, இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் ஒரு அணியைத்தான் அறிவித்துள்ளது.
ஐசிசி அமைப்பு முழுமையாக பணத்தை அடிப்படையாக வைத்தும், தொலைக்காட்சி உரிமை, ஸ்பான்ஸர்கள் வைத்துதான் செயல்பட்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 பவர்ப்ளே, 2 புதிய பந்துகளை பயன்படுத்துகிறார்கள். டென்னிஸ் லில்லி, ஜெஃப் தாம்ஸன், மேற்கு இந்திய தீவுகளின் 5 ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் எல்லாம் எங்கே போனார்கள். வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் எங்கே சென்றார்கள். உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், லெக் ஸ்பின்னர்கள் எங்கு சென்றார்கள்.
அவர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள். ஏனென்றால் ஐசிசி கிரிக்கெட்டை வர்த்தகமயமாக்கி, பணம் சம்பாதிக்கும் பொருளாக மாற்றிவிட்டது. 10 கிரிக்கெட்லீக்குகளை அனுமதி்த்து பணம் சம்பாதிக்கிறது. 3 ஆண்டுகளில் 2 உலகக் கோப்பைகள், லீக் ஆட்டங்கள் நடத்த வேண்டும் என ஐசிசி விரும்புகிறது. 1970-களில் இருந்த கிரிக்கெட்டுக்கும், இப்போது இருக்கும் கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. சச்சினும் ஷோயப் அக்தரும் இல்லாவிட்டால், கிரிக்கெட் பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
பாபர் ஆஸமைவிட சிறந்த வீரர் டி20 போட்டியில் யாருமில்லை. பாகிஸ்தான் அணியிலேயே டி20 போட்டியில் அதிகமான ஸ்கோர் செய்த வீரர் பாபர் ஆஸம். எங்கள் நாட்டுக்கு பாபர் ஆஸம் செய்ததை விராட் கோலியுடன் ஒப்பிடலாம். இதுபோன்ற ஐசிசி அறிவிப்பு எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. இந்த வீடியோவைப் பார்க்கும் ஐசிசி உண்மையான கடந்த 10 ஆண்டுகளுக்கான டி20 அணியை அறிவிப்பார்கள், இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் அணியை அறிவிக்கமாட்டார்கள்’ என சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐசிசி விருதுகளில்’... ‘இந்தியாவின் சீனியர் வீரர்கள் ஆதிக்கம்’... ‘தோனி தான் இந்த 2 அணிகளுக்கும் கேப்டன்’... ‘தமிழக வீரருக்கும் இடம்’...!!!
- ‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...!!!
- ‘அறிமுகப் போட்டியிலேயே அதகளம்’... ‘இன்னொரு ஃபாஸ்ட் பவுலர் இந்திய அணிக்கு கிடைச்சாச்சு’... ‘இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன்’...!!!
- 'நீ விளையாடு...' 'அப்பாவோட உடலை பார்க்க வர வேண்டாம்பா...' மனச கல்லாக்கிய அம்மா...' - அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய முகமது சிராஜ்...!
- VIDEO: "அது நிச்சயம் 'அவுட்' தான்... தேர்ட் அம்பயரும் தப்பு பண்ணிட்டார்!" - சர்ச்சைக்குள்ளான ரன் அவுட்... அம்பயர்களை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!!
- 'சீனியர் வீரர்கள் விக்கெட்டை’... ‘15 நிமிடங்களில் வீழ்த்தி’... ‘இந்திய அணியை மிரள வைக்கும் நடராஜன்’...!!!
- ‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா?’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...!!!
- 'ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க’... ‘ஒருவழியாக ஓகே சொன்ன பிசிசிஐ’... ‘எப்போது முதல்’... ‘வெளியான அதிகாரப்பூர்வ தகவல்’...!!!
- 'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா???'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!!!'...
- “கோலிக்கு ஒரு ரூலு... நடராஜனுக்கு ஒரு ரூலா...??? பாவம்யா, நடராஜன்...!!” - தமிழக வீரருக்காக கோபத்தில் கொந்தளித்த முன்னாள் வீரர்!!! - என்ன நடந்தது, நடராஜனுக்கு??!