ICC : கேப்டன் பட்லர்.. அணியில் மாஸ் காட்டும் முக்கிய இந்திய வீரர்கள்.. பரபர லிஸ்ட்..!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி (ICC) ஆண்டு தோறும் சர்வதேச அரங்கில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும்.

Advertising
>
Advertising

அது மட்டுமில்லாமல், ஒரு ஆண்டில் சிறப்பாக ஆடிய வீரர்களை வைத்து மொத்தமாக ஒரு அணியை உருவாக்கும். அந்த வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான டி 20 அணியை ஐசிசி தற்போது அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடர் நடைபெற்றிருந்தது. இது தவிர இருதரப்பு டி 20 தொடர்களும் நிறைய நடைபெற்றிருந்தது. இப்படி அனைத்து தொடர்களிலும் எக்கச்சக்க வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த பொழுதுபோக்கு நிறைந்த கிரிக்கெட் போட்டிகளாக டி 20 போட்டிகள் இருந்து வருகிறது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான டி 20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.


இந்த அணியின் கேப்டனாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து வீரர் சாம் குர்ரானும் இதில் இடம்பிடிக்க, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் இடம்பிடித்துள்ளனர்.

இது தவிர நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா மற்றும் அயயர்லாந்து வீரர் ஜோஷ் லிட்டில் தேர்வாகி உள்ளனர். மேலும் இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் தான் அதிகம் (3 பேர்) இடம்பெற்றுள்ளனர்.

   
ஆசிய கோப்பைக்கு முன்பு கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, ஆசிய கோப்பை மற்றும் டி 20 உலக கோப்பை தொடர்களில் தான் பேட்டிங்கில் கிங் என்பதை நிரூபித்து தற்போது ஐசிசி டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார். அதே போல, டி 20 போட்டிகளில் வாணவேடிக்கை காட்டி வரும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஐசிசி டி 20 அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி டி 20 2022 ஆம் ஆண்டு அணி விவரம் : ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), முகமது ரிஸ்வான், விராட் கோலி, கிளென் பிலிப்ஸ், சூர்யகுமார் யாதவ், சிக்கந்தர் ராசா, ஹர்திக் பாண்டியா, சாம் குர்ரான், வனிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ராவுஃப், ஜோஷ் லிட்டில்

VIRATKOHLI, HARDIKPANDYA, SURYAKUMAR YADAV, ICC, JOS BUTLER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்