‘அவரோட கேப்டன்ஷிக்கு 10-க்கு 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன்’!.. ரொம்ப காட்டமாக பேசிய சேவாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லி கேப்டன் ரிஷப் பந்தை சேவாக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இளம் கேப்டன் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 75 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை டெல்லி அணி தவறவிட்டது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 58 ரன்களும், ஹெட்மெயர் 53 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் Cricbuzz சேனலில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சேவாக், ‘ரிஷப் பந்த் கேப்டன்ஷிக்கு 10-க்கு 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன். ஏனென்றால் அந்த அளவுக்கு தவறுகள் செய்துள்ளார். உங்களது முக்கியமான பந்துவீச்சாளருக்கு பவுலிங் கொடுக்கவில்லை என்றால், எல்லா கணக்கும் தவறாகிவிடும். அதில் நீங்கள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சூழ்நிலையைப் பொறுத்து பவுலர்களை பயன்படுத்த கேப்டன் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் அதை கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பவுலிங் பொறுப்பை வேறொருவரிடம் கொடுத்துவிட வேண்டும்’ என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘மைதானத்தில் பந்து எப்படி வருகிறது என்பதை கேப்டன் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதைப் பொறுத்து பவுலிங்கையும், பீல்டிங்கையும் மாற்ற வேண்டும். ரிஷப் பந்த் சிறந்த கேப்டனாக வேண்டுமென்றால், இந்த சின்ன சின்ன விஷயங்களெல்லாம் மனதில் வைத்து செயல்பட வேண்டும். கிரிக்கெட்டை ஸ்மார்டாக விளையாடினால், நீங்கள் ஸ்மார்ட் கேப்டனாக மாற முடியும்’ என சேவாக் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்