‘என்ன ஆனாலும் சரி’... ‘இந்த ஐபிஎல் டீமை விட்டு’... ‘நான் எப்போதும் போக மாட்டேன்’... ‘உருகிய ஐபிஎல் கேப்டன்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎன்ன நேர்ந்தாலும் ஐபிஎல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விட்டு பிரிய மாட்டேன் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். எனினும் சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான டி வில்லியர்ஸ் உடன் இன்ஸ்டாகிராமில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ‘பெங்களூரு அணியுடனான எனது பயணம் அற்புதமானது. உங்களுடன் இணைந்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பது எனது கனவு. பெங்களூரு அணியை விட்டு பிரியும் சூழல் எப்போதும் ஏற்படாது. ஐபிஎல்.-லில் நான் விளையாடும் வரை பெங்களூர் அணியில் மட்டுமே இருப்பேன். வேறு எந்த அணிக்கும் போக மாட்டேன். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகல் இப்போது நடைபெறவில்லை. ஆனாலும் பெங்களூர் அணியின் ரசிகர்கள் தரும் ஆதரவு என்னை மெய்சிலிர்க்க செய்கிறது’ என்றார் அந்த அணியின் கேப்டனான விராட் கோலி.
இந்த கருத்தை ஆமோதித்த டி வில்லியர்ஸ் ‘எனக்கும் பெங்களூரு அணியை விட்டு செல்ல மனமில்லை. நான் நிறைய ரன்களை குவிக்க வேண்டும். ஆனாலும் நான் உங்களைப் போல் கேப்டன் இல்லையே’ என்று தமாஷாக கூறினார். அதற்கு விராட் கோலி, ‘பெங்களூர் அணிக்காக நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். இளம் வீரர்கள் 500 முதல் 600 ரன்களை குவித்து சாதிக்க வேண்டும். அதுவே என் விருப்பம்’ என உருக்கம் தெரிவித்தார். 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் இதுவரை ஒருமுறைக்கூட ஐபிஎல் கோப்பையை விராட் கோலி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இன்ஸ்டாகிராம்ல அடிக்கடி கமெண்ட் பண்ணுவான்!'.. சென்னை டாக்டருக்கு காதல் வலையை விரித்து... இளைஞர் செய்த 'பகீர்' காரியம்!.. போலீஸார் அதிர்ச்சி!
- ‘கொரோனாவுடன்’... ‘இந்த மாதிரி விஷயங்களையும்’... ‘எதிர்த்து போராட வேண்டியுள்ளது’... ‘மிரட்டலால் வருந்த வைத்த சம்பவம்’!
- ‘சிஎஸ்கே என்னை டீம்ல எடுப்பாங்கன்னு நினைச்சேன்’.. ‘தோனி என் பக்கத்துலதான் இருந்தாரு’.. சீக்ரெட் உடைத்த தினேஷ் கார்த்திக்..!
- “என்ன கொஞ்சம் பாருங்க தல?”.. வீடியோ கேம் விளையாடும் தோனியின் கவனத்தை ஈர்க்க சாக்ஷி செய்த சேட்டை! தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘ஒரு பக்கம் அதிகரித்தாலும்’... ‘கொரோனா பாதிப்பில்’... ‘கடந்த 3 நாட்களாக நடக்கும் அதிசயம்’!
- 'எங்க நாட்டில் வந்து விளையாடுங்க’.... ‘ஐ.பி.எல். 2020 போட்டியை நடத்த’... ‘விருப்பம் தெரிவித்த பக்கத்து நாடு’... 'பிசிசிஐ உயர் அதிகாரியின் பதில்'!
- 1. டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 2. யாரை டின்னருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என ரசிகர்களின் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அதிரடி பதில்!
- 'கொரோனா பாதிப்பு'... '4 வண்ணங்களாக பிரிக்கப்பட்ட சென்னை'... 'அதிகம் பாதித்தவர்கள் இவர்கள்தான்'... 'சென்னை மாநகராட்சி வெளியீடு'!
- '13வது ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!' .. 'கொரோனா தாக்கம் குறையாததால்' பிசிசிஐ அதிரடி!