"அடுத்த தடவ அஸ்வின பாக்குறப்போ... இப்படி தான் அவர கூப்பிடுவேன்..." நீங்க வேற லெவல் 'பாஜி'... நெகிழ்ந்து போன 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டெஸ்ட் போட்டி வரலாற்றில், அதிவேகமாக 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தரர். முன்னதாக, இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்த நிலையில், அஸ்வின் 77 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை அள்ளினார்.

மூன்றாவது டெஸ்ட்  போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அஸ்வினை பாராட்டினார். மேலும், இந்த சாதனையை பூர்த்தி செய்ததற்காக, அவரை இனிமேல் லெஜண்ட் என்று தான் அழைப்பேன் என்றும் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில், அஸ்வின் சாதனை குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், 'டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதிக விக்கெட்டுகளை எடுத்ததுடன் மட்டுமில்லாமல், பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவும் அஸ்வின் உதவியுள்ளார். அவர் ஒரு 'லெஜண்ட்' என்பதில் சந்தேகமேயில்லை.

400 விக்கெட்டுகளை எடுக்காமல் இருந்தாலும் அஸ்வின் லெஜண்ட் தான். கோலி அஸ்வினை இனிமேல் லெஜண்ட் என அழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். நானும், இனி அஸ்வினை நேரில் பார்க்கும் போது, அவரை லெஜண்ட் என்று தான் அழைப்பேன்' என ஹர்பஜன் சிங் மிகவும் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்