‘டீம்ல சரியா மரியாதை கிடைக்கல, அதான் ஓய்வை அறிவிச்சேன்’!.. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பை கிளப்பிய முன்னணி வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியில் சரியாக மரியாதை கிடைக்காததால் ஓய்வை அறிவித்ததாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தான் இந்த முடிவை எடுக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மன ரீதியாக கொடுக்கும் அழுத்தமே காரணம் என பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார்.

அப்போது இதுதொடர்பாக முகமது அமீர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதில், ‘இனி நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை. என்னுடைய இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகத்தினரின் அழுத்தமே காரணம். என்னை இழிவானவனாக எண்ணியே அணியில் நடத்தினர்.

ஷார்ட்டர் பார்மெட்டில் கூட விளையாட தயாராக இருந்தும், அணியில் எனக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்த நிர்வாகத்தின் கீழ் இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாது என நினைக்கிறேன். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறேன்’ என முகமது அமீர் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய முகமது அமீர், ‘அணியில் எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. அதனால்தான் ஓய்வு பெறும் முடிவை எடுத்தேன். என்னுடைய சுயநலத்துக்காக ஓய்வு முடிவை எடுக்கவில்லை. அந்த நேரம் அணியிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. யாருக்கு தெரியும், வருங்காலத்தில் மீண்டும் என்னை பாகிஸ்தான் அணியில் பார்க்கலாம்’ என தெரிவித்துள்ளார். தற்போது உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மாறினால், மீண்டும் அணிக்கு திரும்பது குறித்து யோசிப்பேன் என முன்னதாக முகமது அமீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் முகமது அமீர் விளையாடி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில், 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போட்டியில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, ஷிக தவான், விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை முகமது அமீர் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்