"நாம யாருங்குறது இந்த மேட்ச்-ல தெரிஞ்சிடும்".. அணி வீரர்களிடம் சொல்லிய ஷ்ரேயாஸ் அய்யர்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பெங்களூரு அணியுடனான தோல்வி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

“கிரிக்கெட்டுல ஒரு ரொனால்டோ, விராட் கோலி தான்”.. புகழ்ந்து தள்ளிய பஞ்சாப் கிங்ஸ் வீரர்.. ஏன் தெரியுமா?

ஐபிஎல்

உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் துவங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

ஷ்ரேயாஸ் அய்யர்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தின் அடிப்படியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாகியிருக்கிறார் ஷ்ரேயாஸ் அய்யர். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான தோல்வி குறித்து பேசியிருக்கிறார் ஷ்ரேயாஸ்.

ஐபிஎல் 15வது சீசனின் 6 வது ஆட்டம் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது. மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா 128 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்தது பெங்களூரு அணி. ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை தவறவிட்ட பெங்களூரு அணி கடைசியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

சுவாரஸ்யம்

இந்த போட்டி குறித்து பேசியுள்ள ஷ்ரேயாஸ் அய்யர்," மேட்சின் இரண்டாவது பாதியில் சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது. இந்த போட்டி மைதானத்தில் நம்முடைய குணத்தையும் அணுகுமுறையையும் வரையறுக்கப் போகிறது என்று சக வீரர்களிடம் சொன்னேன். இறுதியில் வென்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. களத்தில் உண்மையாக போராடினோமா என்பதே நம்முடைய மன உறுதியை பிரதிபலிக்க செய்யும். அந்த வகையில் ஆட்டத்தை இறுதி ஓவர் வரை எடுத்துச்சென்ற வீரர்களை பார்த்து பெருமைப்படுகிறேன்" என்றார்.

மேலும், இறுதியில் விக்கெட்களை வீழ்த்த எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததன் காரணமாக போட்டி கைநழுவி சென்றுவிட்டதாக அய்யர் குறிப்பிட்டார்.

"எல்லாத்துக்கும் 'கவுதம்' அண்ணா தான் காரணம்.." ஒரே மேட்ச்'ல திரும்பி பார்க்க வைத்த இளம் வீரர்.. 'சிஎஸ்கே' மேட்ச்'லயும் சம்பவம் 'Loading' போல

CRICKET, IPL, IPL2022, SHREYAS IYER, KOLKATA KNIGHT RIDERS, KKR, ஷ்ரேயாஸ் அய்யர், ஐபிஎல், கொல்கத்தா அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்