“அத வெளில வந்து சொல்லு பாப்போம்!”.. ரசிகரிடம் அப்படி பேசுனத்துக்கு மன்னிப்பு கோரிய வீரர்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸில் தென் ஆப்பிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்டில் முதல் நாள், ரசிகர் ஒருவருடன் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கோபமாகப் பேசியதை அடுத்து அந்த வீடியோ இணையத்தில் வலம் வந்து பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் இருந்து மீண்டும் மீண்டும் அவர் தகாத வார்த்தை உட்படுத்தப்பட்டதாக இங்கிலாந்து நட்சத்திரம் ஒருவர் குறிப்பிட்ட பிறகு, இதற்கு பதிலளித்த பென் ஸ்டோக்ஸ்,

தான் அளித்த எதிர்வினை தொழில் சார்ந்தது அல்ல என்றும் மேலும் தான் பயன்படுத்திய மொழிக்கு மன்னிப்பு கோருவதாகவும் கேட்டுக்கொண்டார். எனினும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கேப்டன் ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், களத்திற்கு வந்து ஆடிய அந்த 45-வது ஓவரில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது தென்னாப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணி சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது நபர் பென் ஸ்டோக்ஸ் குறிவைத்து, அவரை தரக்குறைவாக பேசி பாப் நட்சத்திரம் எட் ஷீரன் உடன் ஒப்பிட்டதாக கார்டியன் செய்தித்தாள் தெரிவிக்கிறது. அந்த ரசிகருக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய பென் ஸ்டோக்ஸ், ‘மைதானத்திலிருந்து வெளியே வந்து என்னிடம் இதை சொல்லு பார்ப்போம்’ என்று கூறி தகாத வார்த்தையை பயன்படுத்திவிட்டு, பின்னர் அவர் படிகளில் ஏறி மீண்டும் டிரஸ்ஸிங் அறைக்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இதுபற்றி தனது ட்விட்டர் கணக்கில் பேசியுள்ள பென் ஸ்டோக்ஸ்,

ஆட்டம் இழந்த பின்னரும் நேரடி ஒளிபரப்பில், தான் பேசிய தவறான மொழிக்கு உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பை பார்த்த பல இளம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், தான் அவ்வாறு நடந்து கொண்டிருக்கக் கூடாது என்றும் அது தொழில் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, சிறப்பாகவும் கடும் போட்டியுடனும் போய்க் கொண்டிருக்கும் இந்த தொடர், இந்த ஒரு செயலால் சீரழியக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BENSTOKES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்