‘நம்புவீங்களானு தெரியல’!.. இவ்ளோ சாதனையும் ஒரு ‘கிட்னி’யை வச்சுகிட்டுதான் படைச்சேன்.. விளையாட்டு வீராங்கனை பெருமிதம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒரே ஒரு கிட்னியுடன் என்னால் உலக தர வரிசையில் உச்சியை எட்ட முடிந்தது என இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கடந்த 2003ம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றவர். பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள அஞ்சு பாபி ஜார்ஜ் கேரளாவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஒரு கிட்னியுடன் விளையாடி பல வெற்றி பெற்றுள்ளதாக அஞ்சு பாபி ஜார்ஜ் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘இதை பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் மிக அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி, மந்தமான கால்கள், இப்படி பல தடைகள் என் முன் இருந்தன. ஆனாலும் என்னால் உலக தர வரிசையில் உயரத்தை அடைய முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயம் என்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா’ என்று அஞ்சு பதிவிட்டுள்ளார்.
இவரது ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு (Kiren Rijiju), ‘அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்