வேற 'வழியில்ல' தொடர் தோல்வியை சமாளிக்க.... 'சூப்பர்' பிளேயரை களமிறக்கும் அணி... என்ன செய்ய போகிறார் தோனி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. ஒவ்வொரு அணியிலும் இளம்வீரர்கள் வெறித்தன ஆட்டம் போடுகின்றனர். சில மேட்சுகள் கடைசி வரை த்ரில்லை தக்க வைப்பதால் ரசிகர்கள் என்ன ஒரு மேட்ச் என சிலாகிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்ற போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. கடைசி 2 போட்டிகளிலும் சென்னை, ஹைதராபாத் இரண்டு அணிகளும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவி உள்ளதால் வெற்றிப்பாதைக்கு திரும்ப 2 அணிகளும் மிகுந்த பிரயத்தனம் செய்யும்.

சென்னை அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சொதப்பலாக உள்ளது. அதேபோல ஹைதராபாத் அணியும் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி வருகிறது. இதனால் அந்த அணி முன்னாள் கேப்டனும், கடைசி வரை வெற்றிக்காக போராடக்கூடியவருமான கனே வில்லியம்சனை அடுத்த போட்டியில் களமிறக்குகிறது. முதல் 2 போட்டிகளில் அவர் ஆடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.இதையடுத்து அடுத்த போட்டியில் அவர் ஆடவிருக்கிறார். இதை வில்லியம்சனே உறுதி செய்துள்ளார்.

தான் காயத்தில் இருந்து மீண்டு பிட்டாக இருப்பதால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக களமிறங்குவேன் என தெரிவித்து இருக்கிறார். இதனால் சென்னை அணிக்கு நெருக்கடி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தோனி என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. எனினும் இந்த போட்டியில் கண்டிப்பாக சென்னை அணி வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தோனியின் திட்டம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்