கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து விராட் கோலி முன்பே கூறியதாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஒரே சந்தேகமா இருக்கே.. முடியை ஓபன் பண்ணிப் பார்த்த அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் ‘ஷாக்’ கொடுத்த பெண்கள்..!

விராட் கோலி கேப்டன் பதவி விலகல்

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக திடீரென ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ நீக்கியது. இதனை அடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

தொடரும் சர்ச்சை

விராட் கோலி அடுத்தடுத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். முன்னாள் வீரர்கள் பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரிக்கி பாண்டிங் கருத்து

இந்த நிலையில் விராட் கோலியின் பதவி விலகல் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியிலேயே, கேப்டன் பதவி விலகுவது குறித்து விராட் கோலி என்னிடம் பேசினார். அப்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து கேப்டனாக இருக்க விரும்புகிறேன் கூறினார்’ என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம்

தொடர்ந்து பேசிய அவர், ‘விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. அவர் இந்திய அணியை மிகவும் நேசித்தார். மைதானத்தில் கோலி விளையாடுவதை 1 மணிநேரம் பார்த்தாலே அவர் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார் என்பது நமக்கு புரிந்துவிடும். இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஏனென்றால், இந்தியர்கள் அனைவரும் கிரிக்கெட்டை உயிர் போன்று நேசிக்கின்றனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு எப்போதுமே பொறுப்பு அதிகம்.

பாண்டிங் பாராட்டு

விராட் கோலி கிட்டத்தட்ட 7 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளிலும் அற்புதமான வெற்றிகளை பெற்றுள்ளது. அவர் கேப்டன் பதவியிலிருந்து வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தாலும், பல சாதனைகளைப் படைத்த பிறகே விலகியுள்ளார்’ என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

ஆஹா.. வேறலெவல் ஐடியா இது.. தம்பி எப்ப ஜாய்ன் பண்றீங்க.. அசந்துபோய் கூப்பிட்டு வேலை கொடுத்த கம்பெனி..!

KOHLI, IPL, RICKY PONTING REVEALS, FORMER AUSTRALIA CAPTAIN RICKY, VIRAT KOHLI, T20I CAPTAINCY, இந்திய அணி, விராட் கோலி, கேப்டன் பதவி, ரிக்கி பாண்டிங்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்