‘தனி ஒருவனாக போராடிய மனுசன்’!.. சூப்பர் ஓவரில் தோற்றப்பின் கேன் வில்லியம்சன் ‘உருக்கமாக’ சொன்ன ஒரு வார்த்தை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கேன் வில்லியம்சன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா 53 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இதில் வார்னர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா ரன் அவுட் செய்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன்-ஜானி பேர்ஸ்டோ கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் 38 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோ, ஆவேஷ் கானின் ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய விராட் சிங் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த கேதர் ஜாதவ் 9 ரன்னில் அவுட்டாகினார். இவர்களைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 5 ரன்னிலும், ரஷித் கான் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
தொடர்ந்து விக்கெட்டுகள் சென்று கொண்டிருந்தாலும், தனி ஆளாக கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42 பந்துகளில் தனது அரைசதத்தை (51 ரன்கள்) அடித்தார். அப்போது கடைசி 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. அப்போது 19-வது ஓவரில் விஜய் சங்கர் (8 ரன்) போல்டாகி வெளியேறினார்.
இதனை அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வில்லியம்சன்-சுஜித் ஜோடி களத்தில் இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்து ஓய்டான செல்ல அடுத்த பந்து பவுண்டரி, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து சுஜித் ஸ்ட்ரைக்கை வில்லியம்சன் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் சுஜித், சிக்சர் மற்றும் சிங்கிள் எடுத்தார். இதனை அடுத்து கடைசி 2 பந்தில் 2 ரன் மட்டுமே சென்றது. இதனால் 20 ஓவர்களில் 159 ரன்கள் ஹைதராபாத் அணி எடுத்தது.
இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய கேன் வில்லிம்சன், ‘சூப்பர் ஓவர் என்றதும் சோர்வாகி விட்டேன். எதிர்பாராத விதமாக போட்டி முடிவில் டை ஆகிவிட்டது. நிச்சயமாக சொல்வேன், இது எங்களுக்கு சிறந்த போட்டிதான். நிறைய நல்லவை நடந்துள்ளன. தற்போது அடுத்து போட்டியில்தான் கவனம் உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சூப்பர் ஓவர்ல ‘SRH’ பண்ணுன 2 பெரிய தப்பு.. இது ஜானி பேர்ஸ்டோவுக்கு மட்டுமில்ல ரசிகர்களுக்கே ‘ஷாக்’ தான்..!
- ‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’!.. ‘அவரை ஏன் ப்ளேயிங் 11-ல எடுத்தீங்க வார்னர்..?’.. கேப்டனை கேள்வியால் துளைத்து எடுக்கும் ரசிகர்கள்..!
- ‘ஐபிஎல் தொடரில் இருந்து விலகுறேன்’!.. திடீரென அறிவித்த அஸ்வின்.. ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’.. என்ன காரணம்..?
- ‘அவர் விளையாடுறத பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு’!.. இளம் ‘தமிழக’ வீரரை ஸ்பெஷலாக புகழ்ந்த தினேஷ் கார்த்திக்.. யாருன்னு தெரியுதா..?
- VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படிங்க’!.. ‘வந்த உடனே அவுட்’.. கடும் கோபத்தில் கத்திய வீரர்..!
- ‘அதை நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு’!.. ‘உண்மையான ஹீரோ அவங்கதான்’.. போட்டி முடிந்தபின் ‘உருக்கமாக’ பேசிய மோரிஸ்..!
- ‘இன்னைக்கு இருக்கு கச்சேரி’!.. வெற்றியை தீர்மானிக்குறதுல ‘இதுக்குதான்’ முக்கிய பங்கு இருக்கு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- 'இப்படிப்பட்ட ப்ளேயர வச்சுகிட்டா பஞ்சாப் கிங்ஸ் திணறிட்டு இருக்கு'!?.. ஏன் இவருக்கு வாய்ப்பு கொடுக்கல?.. சரமாரி கேள்வி!.. கோச் 'கும்ப்ளே' விளக்கம்!
- 'மேட்ச் நடுவுல செல்ஃபியா?.. என்னயா நடக்குது இங்க?'.. வேற லெவல் சம்பவம்!.. என்ன இப்படி கெளம்பிட்டாங்க'?
- 'பவுலர்ஸ் பாவம் இல்லயா!?.. ஒவ்வொரு அடியும் அப்படி விழுது'!.. 'Mr.360 டிகிரி பட்டதுக்கு இன்னொரு வீரர் போட்டி'!.. கவாஸ்கர் நெகிழ்ச்சி!!