எனக்கு கிரிக்கெட் மட்டும்தான் தெரியும்.. அரசியல் தெரியாது.. ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு ரெய்னா சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட்டின் 15-வது தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி நடைபெற்றது. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்க 896 இந்திய வீரர்கள், 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,214 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். இதில் இருந்து 590 வீரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதிப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

Advertising
>
Advertising

"ப்ளீஸ்.. அதை கண்டுபிடிச்சு கொடுங்க".. இந்தியர்களிடம் ஹெல்ப் கேட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன்.!

ரெய்னாவிற்கு இடமில்லை

நடந்து முடிந்த இரண்டுநாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே விளையாடிய  பிராவோ,உத்தப்பா, தீபக் சஹார் ஆகியோரை அந்த அணி மீண்டும் ஏலத்தில் எடுத்து தக்கவைத்துக்கொண்டது. இருப்பினும் மற்ற நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டு பிளஸ்ஸிஸ் ஆகியோரை, சென்னை அணி ஏலத்தில் எடுக்காமல் விட்டு விட்டது. இதில், டு பிளஸ்ஸிஸை கூட, பெங்களூர் அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துக் கொண்டது. ஆனால், ரெய்னாவை எடுக்க, எந்த அணிகளும் முன் வரவில்லை. இதனை அடுத்து ரெய்னாவின் ரசிகர்கள் சென்னை அணியின் அணுகுமுறையை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை அணிக்கு விளையாடி வந்த ரெய்னா இந்த முறை ஏலத்தில் அந்த  எடுக்கப்படாதது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு பிறகு தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரெய்னாவிடம் “நீங்கள் தமிழ்நாடு, உ.பி மற்றும் சென்னையில் பிரபலமான வீரர். அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அரசியலில் சேர்வீர்களா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா, “இல்லை, இல்லை! கிரிக்கெட் தான் என்னுடைய ஒரே காதல். கிரிக்கெட்டுடன் தான் இருப்பேன். இதுதான் எனக்குச் தெரிஞ்ச விளையாட்டு, அரசியல் எனக்கு தெரியாது. எனக்கு அரசியல் புரியாது. இப்போது நல்ல சமையல்காரர் ஆகவேண்டும் என்பதே விருப்பம். எந்த ஒரு சமையலையும் நன்றாகச் செய்கிறேன். எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன்” என்றார்.

34 வருஷத்துக்கு அப்புறம் ஆஸ்கார் நிகழ்ச்சியில் நடக்க இருக்கும் மாற்றம்..!

I DON’T KNOW POLITICS, SURESH RAINA, IPL AUCTION, FORMER CSK BATSMEN, சென்னை சூப்பர் கிங்ஸ், சுரேஷ் ரெய்னா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்