"இந்திய கிரிக்கெட் அணில ஆட எனக்கு தகுதி இல்லை" - வைரலாகும் இளம் இந்திய வீரரின் பகீர் கருத்து

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட தற்போது தனக்கு தகுதியில்லை என ரியான் பராக் கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 20 வருடங்களாக தலைமறைவு.. இனி பிரச்சினை வராதுன்னு சொந்த ஊருக்கு திரும்பியவரை தூக்கிய போலீஸ்..மருத்துவர் மரண வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்..!

ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் ஆல்-ரவுண்டர் ரியான் பராக், ஐபிஎல் 2022 தொடரின் போது பல முறை சமூக ஊடக விவாதங்களின் மையப் புள்ளியாக இருந்துள்ளார். சில சமயங்களில் அனுபவம் வாய்ந்த எதிரணி வீரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவும், சில சமயங்களில் அது அவரது அவுட்-ஆஃப்-பாக்ஸ் கொண்டாட்டங்களாகவும் சமூக வலைதளங்களில் பேசு பொருளானார். நடுவரை நோக்கிய எதிர்வினைக்காகவும் பராக் விமர்சிக்கப்பட்டார்.

மேலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில், அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இந்த ஐபிஎல்லில் RR அணிக்காக அனைத்து 17 போட்டிகளிலும் விளையாடிய போதிலும், பராக் ஆட்டமிழக்காமல் ஒரு 56 ரன்களுடன், 183 ரன்கள் மட்டுமே எடுத்தார். RR தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் ரியான் பராக் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை பல முறை பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர், ஆனால் அஸ்ஸாம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் இன்னும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப சரியாக செயல்பட முடியவில்லை.

பராக், தான் விளையாடும் அணிக்காக தொடர்ந்து போதுமான போட்டிகளில் வெற்றிகரமாக செயல்பட முடியாததால், இந்திய அணியில் இடம்பிடிக்க தனக்கு "தகுதி இல்லை" என்று கூறியுள்ளார்.  மேலும், "எனது அணியை நான் ஓரிரு போட்டிகளில் வெற்றிபெற செய்தேன், ஆனால் அது போதாது, ஒரு தொடரில் எனது அணிக்காக ஆறு-ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நான் இந்திய அணியில் இருப்பேன். தற்போது, ​​இந்திய அணிக்கான சாத்தியக்கூறுகளில் (பட்டியலில்) என் பெயர் வந்தால் கூட எனக்கு நன்றாக இருக்காது. நான் இப்போது அதற்கு தகுதியானவன் அல்ல. வரும் சீசனில், எனது அணியை மேலும் வெற்றிகளுக்கு வழிநடத்தினால் எனது நம்பிக்கை உயரும்," என்று கூறினார்.

இந்தியாவின் 2018 U19 உலகக் கோப்பை வென்ற அணியில் வீரராக இருந்த பராக், "6-7 இடத்தில் விளையாட விரும்புவதாகவும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியைப் போல அந்த 6-7 இடத்தில் வெற்றியை அடைய விரும்புவதாகவும் கூறினார்.

Also Read | "ஒன்னு ரெண்டு மேட்ச் நல்லா ஆடுனா போதுமா? அவரால அப்செட் ஆயிருக்கேன்.." சஞ்சு சாம்சன் பற்றி பேசிய இந்திய அணி முன்னாள் கேப்டன்!

CRICKET, INDIAN TEAM, INDIAN TEAM LIST, RIYAN PARAG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்