'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மாநில அணிக்கு தன்னை தேர்வு செய்யாமல் முதல் முறையாக நிராகரித்தபோது வேதனை தாங்க முடியாமல் இரவு முழுவதும் கதறி அழுததாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளம் மூலம் முன்னாள் வீரர்கள், ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார்.

அந்த வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது தன் வாழ்வில் நிகழ்ந்த சோக நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டார். அதில் முதல் முறையாக டெல்லி மாநில அணிக்காக தன்னை தேர்வு செய்யாதபோது, மனம் உடைந்து அதிகாலை 3 மணி வரை சத்தம் போட்டு கதறி அழுததாக குறிப்பிட்டார்.

நிச்சயம் தேர்வு செய்யப்படுவேன் என்று ஆவலுடன் காத்திருந்ததாகவும், நடந்ததை தம்மால் நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்ட கோலி, அந்த சமயத்தில் தான் உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ரன் குவித்திருந்ததாக தெரிவித்தார். எல்லாமே எனக்கு சரியாக அமைந்திருந்தது. சிறப்பாக விளையாடி நல்ல நிலையை எட்டியும் நிராகரிக்கப்பட்டதாக மனம் உடைந்து கூறினார்.

"என்ன காரணத்துக்காக என்னை சேர்க்கவில்லை என்று பயிற்சியாளரிடம் தொடர்ந்து 2 மணிநேரம் பேசினேன். எதுவும் தெரியாமல் புலம்பினேன். ஆனால் மீண்டும் விடா முயற்சியும், ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கும்போது அது உங்களுக்குரியதை பெற்றுத்தரும். இதைத்தான் மாணவர்கள் செய்ய வேண்டும்" என்றும் கூறினார்.

கடினமான நேரங்களில் உங்களது பிடிவாத குணங்களை உதறிவிட்டு, தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடினால், இறுதியில் அதற்குரிய நல்ல வழிமுறையை கண்டறிவீர்கள் என நம்பிக்கை தரும் விதமாக மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்