‘என்ன இப்படி கேட்டீங்க’.. நிருபர் எழுப்பிய கேள்வியால் ‘கடுப்பான’ புஜாரா.. அப்புறம் ‘கூலாக’ சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் புஜாரா கடுப்பானார்.

Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இதனை அடுத்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. இதன் முதல் போட்டி நாளை (25.11.2021) கான்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஹானே கேப்டனாகவும், புஜாரா துணைக்கேப்டனாகவும் செயல்பட உள்ளனர்.

இந்த நிலையில் புஜாரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சமீப காலமாக சதம் அடிக்காதது குறித்து நிருபர் ஒருவர் புஜாராவிடம் கேள்வி எழுப்பினார். இதனால் சற்று கோபமான புஜாரா, பின்னர் அமைதியாக அந்த கேள்விக்கு பதிலளித்தார். அதில், ‘நான் எப்போதும் என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். சமீப காலமாக நான் சதம் அடிக்கவில்லை என்று தெரியும். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அணிக்காக ஸ்கோரை உயர்த்துவதில் தான் என் கவனம் உள்ளது. அப்படி விளையாடினால் சதம் அடிக்கவும் வாய்ப்புள்ளது’ என புஜாரா பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘எனது ஆட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாட விரும்புகிறேன். சதம் அடிக்க வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடினால், அது நம் பேட்டிங்கை பாதிக்கும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பயமின்றி விளையாடினேன். அதேபோல் தான் நியூஸிலாந்துக்கு எதிராகவும் விளையாட இருக்கிறேன்’ என புஜாரா கூறியுள்ளார்.

புஜாரா, இதுவரை 90 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6494 ரன்களை எடுத்துள்ளார். இதில் 18 சதங்களை விளாசியுள்ளார். இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். அதன்பிறகு 38 இன்னிங்ஸில் விளையாடியுள்ள புஜாரா 1 சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PUJARA, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்