‘நானும் எல்லாரையும் மாதிரி மனுஷன்தான்’ ‘எனக்கும் கோபம் வரும்’.. ஆனா..! முதல் முறையாக மனம்திறந்த ‘கூல்’ தோனி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

எல்லோரையும் போல தனக்கும் கோபம் வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குபின் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. அதனால் அந்த சமயம் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் இந்திய ராணுவத்தில் சேவை செய்வற்காக இரண்டு மாத விடுப்பில் செல்வதாக தோனி திடீரெனெ அறிவித்தார். அதனால் அப்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறவில்லை. இதனை அடுத்து நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் தோனி விளையாடவில்லை.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்குபின் முதல் முறையாக தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்துகொண்டார். அங்கு பேசிய அவர், ‘எல்லோரையும் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்கும் கோபம் வரும். ஆனால் மற்றவர்களைவிட கோபத்தை கட்டுப்படுத்துவதால் அது வெளியே தெரிவதில்லை. சில நேரங்களில் நானும் வெறுப்பு அடைவேன். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் மீண்டுவிடுவேன். ஒரு பிரச்சனையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடவே நினைப்பேன். இதுவே என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான வழியாக கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர், ‘இந்தியர்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுவார்கள். நான் எனது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பேன். ஏனென்றால் அப்போதுதான் நல்ல முடிவிற்கான பாதையை அடைய முடியும். ஒரு முடிவை நினைத்து பணியாற்றினால் அது அதிகமான நெருக்கடியை கொடுக்கும். அதனால் நான் முடிவை நினைத்து செயல்பட மாட்டேன். என்னை பொருத்தவரை ஒரு அணியின் கேப்டன் மிகவும் நேர்மையானவராக இருக்க வேண்டும்’ என தோனி கூறியுள்ளார்.

MSDHONI, BCCI, CRICKET, TEAMINDIA, WICKETKEEPER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்