‘நான் ஒன்னும் பெரிய பவர் ஹிட்டர் கிடையாது’!.. ‘ஆனா அவங்க ரெண்டு பேர்கிட்ட கத்துக்க ஆசைப்படுறேன்’.. புஜாரா ஓபன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இரு வீரர்களிடம் இருந்து பவர் ஹிட்டர் எப்படி அடிக்க வேண்டும் என கற்றுக்கொள்ள விரும்புவதாக புஜாரா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, ESPN Cricinfo சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், ‘நான் ஒன்றும் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. அதற்கு எனது ஸ்ட்ரைக் ரேட் தான் உதாரணம். அதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அதே சமயத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறேன். இதில் ரோஹித் பெரிய பவர் ஹிட்டர் எல்லாம் இல்லை. பந்தை சரியாக கணித்து அதற்கு ஏற்ற படிஷார்டர் பார்மேட் டைம் செய்கிறார்’ என புஜாரா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘அதேபோல் கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மாதிரியான வீரர்கள் அக்மார்க் கிரிக்கெட் ஷாட்களை தான் விளையாடுகிறார்கள். அதே நேரத்தில் புதுவிதமான ஷாட்களையும் விளையாடுகிறார்கள். அவர்களிடமிருந்தும் நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் புதுவிதமான ஷாட் ஆட வேண்டுமென்ற மைண்ட் செட் உள்ளது. அதன் மூலம் சாதிக்க விரும்புகிறேன்.

ஆனாலும் எது நமது பலமோ அதில் நிலையாக நின்று விளையாடுவது ஒவ்வொரு வீரருக்குமான உத்வேகம். தொடக்கத்தில் டி20 போட்டிகளில் விளையாடுவதனால் எனது டெஸ்ட் ஆட்டம் பாதிக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எது எனது பலமோ அது அப்படியேதான் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என புஜரா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு சென்னை அணி புஜராவை ஏலத்தில் எடுத்தது. கடந்த 7 ஆண்டுகளாக எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்தில் புஜாராவை எடுத்ததும், அருகில் இருந்த மற்ற அணி நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்