"எச்சி தொட்டு தேச்சு வீசுனாத்தான் பந்து ஸ்விங் ஆகும்..." "வேணாம்பா... கொரோனா பரவிக்கிட்டு இருக்கு..." அடம்பிடிக்கும் இந்திய வீரர்...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா பீதியால் பந்தை ஷைனிங் செய்வது எப்படி என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்கிறது.

போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரை தொட்டு பந்தை நன்றாகத் தேய்ப்பார்கள். இதனால் பந்து ஷைனிங் ஆகி வீசும் போது நன்றாக ஸ்விங் ஆகும். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், இப்படி செய்தால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார், போட்டியின்போது உமிழ்நீரை பயன்படுத்த மாட்டோம என தற்போது உறுதியாக கூற இயலாது எனக் குறிப்பிட்டார். உமிழ்நீரை பயன்படுத்தாவிட்டால் பந்தை எப்படி ஷைனிங் செய்வது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பந்து வீச்சு எதிர் அணியினருக்கு சாதகமாக அமைந்து விட்டால் பிறகு நாங்கள் தான் சரியாக விளையாட வில்லை என கூறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.  அணியினர் தரும் ஆலோசனையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

BHUVANESHWAR KUMAR, CRICKET, SWING, SALAIVA, SHINING, BALL, CORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்