"அட, இப்டி தான் கோலி'ய தோனி காலி பண்ணாரா??.." மேட்ச் நடுவே போட்ட மாஸ்டர் பிளான்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் அணிக்கு எதிராக வெற்றி பெற்று, தங்களின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.

"அட, இப்டி தான் கோலி'ய தோனி காலி பண்ணாரா??.." மேட்ச் நடுவே போட்ட மாஸ்டர் பிளான்.. வாயைப் பிளந்த ரசிகர்கள்
Advertising
>
Advertising

முன்னதாக, கொல்கத்தா, லக்னோ, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்த சென்னை அணி, நேற்றைய (12.04.2022) போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ், 17 ரன்கள் எடுத்து அவுட்டாகி, மீண்டும் ஒரு முறை சொதப்பி இருந்தார். இதன் பின்னர் வந்த மொயீன் அலி ரன் அவுட்டாகி வெளியேற, உத்தப்பா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இணைந்து ரன் சேர்த்தனர்.

ருத்ர தாண்டவம் ஆடிய உத்தப்பா, துபே

இருவரும், மாறி மாறி பெங்களுர் பந்து வீச்சை புரட்டி எடுக்க, சிஎஸ்கேவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. உத்தப்பா 88 ரன்களும், ஷிவம் துபே 95 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், நடுவே சபாஷ் அக்மது, சுயாஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓரளவுக்கு அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருந்த போதிலும், பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 23 ரன்கள் வித்தியாயசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று அசத்தி இருந்தது. இனிவரும் போட்டிகளில், தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆப் சுற்று சிஎஸ்கே அணிக்கு எளிதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனியின் மாஸ்டர் பிளான்

இதனிடையே, பெங்களுர் வீரர் கோலியை அவுட் செய்ய தோனி போட்ட பிளான் தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பாப் டு பிளெஸ்ஸிஸ் அவுட் ஆனதும் கோலி களத்திற்கு வந்தார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் போட்டியின் முடிவு கூட மாறும் என்பதால், உடனடியாக ஃபீல்டிங்கை தோனி மாற்றி அமைத்தார்.

கோலி பேட்டிங் செய்ய வரும் போது, டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் யாரும் பீல்டிங் செய்யவில்லை. தொடர்ந்து, கோலி ஸ்ட்ரைக் எடுத்து பேட்டிங் ஆட வந்த போது, அமைதியாக ஒரு ஃபீல்டரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் தோனி நிறுத்தினார். அப்போது பந்து வீசிய முகேஷ் சவுத்ரியும், சரியாக ஷார்ட் பிட்ச் பந்தினை வீசி திட்டத்தினை செயல்படுத்த, கோலியோ அதனை டீப் ஸ்கொயார் லெக் பகுதிக்கு வேகமாக அடித்தார்.

 

இதனை அப்பகுதியில் பீல்டிங் நின்ற ஷிவம் துபே கேட்சாக மாற்ற, ஒரு ரன்னில் நடையைக் காட்டினார் கோலி. 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், ஒரு வேளை கோலி களத்தில் நின்றிருந்தால், போட்டியின் முடிவு கூட மாறி இருக்கலாம் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

MSDHONI, VIRATKOHLI, MSD, CSK, IPL 2022, CSK VS RCB, தோனி, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்