‘தோனி மாதிரி கேப்டன்ஷி’.. இதை மட்டும் சரிபண்ணிட்டா வேறலெவல்ல வருவாரு.. இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய ரவி சாஸ்திரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியை போல யோசித்து செயல்படக்கூடிய கேப்டனாக ரிஷப் பந்த் உள்ளதாக ரவி சாஸ்திரி புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதனை அடுத்து நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இதனை அடுத்து விளையாடிய டெல்லி அணி, 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் ரிஷப் பந்தின் கேப்டன்ஷிப்பை தோனியுடன் ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் அழுத்தத்தில் விளையாடும் வீரர் கிடையாது. அவர் எப்போதுமே தனது இயல்பான ஆட்டத்தை விளையாடக் கூடியவர். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்திக் கொள்வார். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரது கேப்டன்ஷிப் எனக்கு பிடிக்கும்.

ஏனென்றால் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது பவுலர்களை மாற்றி, மாற்றி பந்து வீச வைத்த விதம் மிகவும் பிடித்திருந்தது. தோனி எவ்வாறு களத்தில் அதிகமாக  சிந்தித்து செயல்படுவாரோ, அதேபோல் ரிஷப் பந்தின் கேப்டன்ஷிப் உள்ளது. களத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் சரியாக அமைகிறது. பேட்டிங்கில் சற்று தடுமாறினாலும், சரியாக கற்றுக்கொண்டு விளையாடினால் மேலும் உயரத்துக்கு செல்வார்’ என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். கடந்த ஆண்டு முதல் டெல்லி அணியை கேப்டனாக ரிஷப் பந்த் வழி நடத்தி வருகிறார். இவர் தலைமையிலான டெல்லி அணி, கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்று வரை முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, RISHABHPANT, RAVI SHASTRI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்