நேத்து போட்டியில.. இப்படி ஒரு சாதனை நடந்துச்சா.. சூரிய குமார் யாதவ் - வெங்கடேஷ் அய்யரை கொண்டாடும் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவரும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியதை தொடர்ந்து T20 தொடரையும் இந்தியாவே தட்டித் தூக்கியது. இந்நிலையில் மூன்றாவது T20 போட்டியில் ஆறுதல் வெற்றியை கூட வெஸ்ட் இண்டீஸ் அணி பெறவில்லை.
இந்திய அணி ஆதிக்கம்
முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 8 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான சூரிய குமார் யாதவ் - வெங்கடேஷ் அய்யர் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளனர்.
அதிரடி காட்டிய சூர்ய குமார் - வெங்கடேஷ் அய்யர் ஜோடி
போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது. இதனை அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். ருதுராஜ் கெய்வாட் 4 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இஷான் கிஷன் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர் (25), நடுவரிசையில் இறங்கிய கேப்டன் ரோகித் 7) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனையடுத்து அதிரடி ஜோடியான சூரிய குமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் அய்யர் களத்திற்கு வந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சாளர்களை இருவரும் சேர்ந்து துவம்சம் செய்தனர். 31 பந்துகளை சந்தித்த சூரிய குமார் யாதவ் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 65 ரன்களை குவித்தார். அதேபோல, 19 பந்துகளை சந்தித்த வெங்கடேஷ் அய்யர் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை குவித்தார். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது.
சாதனை
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்தியா 160 ரன்களையாவது எட்டுமா? என ரசிகர்கள் மத்தியில் கவலை எழுந்தது. ஆனால், வந்தது முதல் அதிரடி காட்டிய சூர்ய குமார் - வெங்கடேஷ் அய்யர் ஜோடி அந்தக் கவலையை அடித்து நொறுக்கியது. இந்த ஜோடி கடைசி 5 ஓவர்களில் 86 ரன்களை குவித்தது. T20 போட்டிகளில் இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் குவித்த அதிகமான ரன் இதுவாகும்.
அதிரடி மூலம், இந்தப் புதிய சாதனையை படைத்த சூரிய குமார் யாதவ் - வெங்கடேஷ் அய்யர் ஜோடியை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
எழுந்து நின்று பாராட்டிய டிராவிட்.. சூரிய குமார் கொடுத்த செம்ம போஸ்.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு? .. இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. அடுத்த பாஸ்ட் பவுலரும் ரெடி!
- "நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு
- ஜஸ்ட் மிஸ்: யுவராஜ் சிங் சாதனையை காலி பன்னிருப்பாரு.. அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
- கோலி உங்களுக்கு என்னதான் ஆச்சு..? மறுபடியும் இப்படி ஏமாத்திட்டீங்களே.. கடுப்பான ரசிகர்கள்..!
- எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!
- யார் மேல தப்பு..? சூர்யகுமாரை திட்டிக்கிட்டே போன கே.எல்.ராகுல்.. பரபரப்பு வீடியோ..!
- கில்கிறிஸ்டாக மாறிய ரிசப் பண்ட்! தோனிக்கு அடுத்து கிடைத்த பொன்னான வாய்ப்பு
- "பழைய பன்னீர்செல்வமா திரும்பி வருவேன்'.. கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
- அதே தப்பு.. கோலி இனிமேல் இப்படி பண்ணாதீங்க.. கடுப்பான கவாஸ்கர் கொடுத்த வார்னிங்..!