காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள்.. முழு லிஸ்ட் இதோ...!
Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாஸ் என்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்.. CSK அணி பகிர்ந்த தரமான வீடியோ..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

Here is the List of players ruled out for IPL 2023 Season

Images are subject to © copyright to their respective owners.

காயம்

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரர்கள் சிலர் காயம் காரணமாக இந்த ஆண்டு தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் பும்ரா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தெரிகிறது. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் ஓய்வில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு மும்பை வீரரான ரிச்சர்ட்சன் கிளப் கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த நிலையில் அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

CSK நிலவரம்

அதேபோல, டெல்லி அணியின் ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரை பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பண்டுக்கு பதிலாக டெல்லி அணியை வார்னர் வழிநடத்த இருக்கிறார். பஞ்சாப் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோவும், ஆர்சிபி-யின் வில் ஜாக்ஸ், ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெய்ல் ஜெமிசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் சிசாண்டா மஹாலாவை CSK அணி தேர்வு செய்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

அதே நேரத்தில் CSK-வின் முகேஷ் சவுத்ரி, லக்னோவின் மொஹ்சின் கான், கொல்கத்தாவின் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இந்த வருட ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான் எனவும் சொல்லப்படுகிறது.

Also Read | சிவனும் சக்தியும் சேர்ந்தா.. தீவிர பயிற்சியில் ஜடேஜா - தோனி.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, IPL 2023 SEASON, LIST OF PLAYERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்