அவங்க பொருளை எடுத்து அவங்களையே.. ஆஸ்திரேலியா டெஸ்ட்டில் கங்குலி போட்டுக்கொடுத்த பிளான்.. சீக்ரட்டை உடைத்த பதானி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி 2001ஆம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                   Images are subject to © copyright to their respective owners.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. முதல் இன்னிங்சில் ஃபாலோவ் ஆன் பெற்ற நிலையில் அடுத்த இன்னிங்சில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதிர செய்தது. அதற்கு காரணமாக இருந்தவர்கள் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் ராகுல் டிராவிட்.

Images are subject to © copyright to their respective owners.

பார்ட்னர்ஷிப்

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் சதமடிக்க ஹைடன், ஸ்லேட்டர், லாங்கர் ஆகியோரது பங்களிப்பினால் நல்ல ரன்னை எடுத்திருந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்தியா வெறும் 171 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஃபாலோவ் ஆன் ஏற்படவே, இந்தியா மீண்டும் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது.

254 - 4 என்ற நிலையில் லக்ஷ்மன் டிராவிட்டுடன் கரம் கோர்த்து ஆஸ்திரேலியாவை திணறடித்தார். அதில் லக்ஷ்மன் 281 ரன்கள் குவிக்க, டிராவிட் 180 ரன்களை எடுத்திருந்தார். இதன் பலனாக இந்தியா 657 ரன்களை குவித்தது. இருவரும் சேர்ந்து 376 ரன்களை குவிந்திருந்தனர். அந்த போட்டியில் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

பதானி பதிவு

இந்நிலையில் இதுகுறித்து பதானி எழுதியிருந்த பதிவில் லக்ஷ்மன் டிராவிட் பார்ட்னர்ஷிப் எப்படி வெற்றிக்கு உதவியது என்பதை விளக்கியிருந்தார். அவர் எழுதியுள்ள மற்றொரு பதிவில்,"ஐந்தாவது நாளில் எங்கள் கீப்பர் மோங்கியா காயம் அடைந்தார். ஆகவே நான் சப்ஸ்டிடியூட்-ஆக உள்ளே சென்றேன். அணியில் ஆங்கிலம் நன்றாக பேசக்கூடிய சிலரில் நானும் ஒருவன் என்பதை அறிந்த கங்குலி ஆஸி. வீரர்களின் இன்னிங்க்ஸை கடுமையாக்கும்படி கூறினார்.

அப்போது நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. ஆனால், 100 போட்டிகளுக்கு மேலே விளையாடிய எதிரணியின் கேப்டனை (ஸ்டீவ் வாக்) வார்த்தைகளால் சீண்டினேன். அவரது விக்கெட் விழுந்ததில் என்னுடைய பங்கும் இருந்தது என்பதை நினைத்துப்பார்க்கையில் நான் அதிர்ஷ்டசாலி என்றே தோன்றியது. இதைவிட சிறந்த தருணம் இருந்திருக்க முடியாது. மறக்க முடியாத நினைவுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

AUSTRALIA, HEMANG BADANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்