Video: அவரோட ‘ஆத்மா’ சாந்தி அடையட்டும்.. அரைசதம் அடிச்சதும் காட்டப்பட்ட ‘T-Shirt’.. யார் அந்த சுரிந்தர்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் ரானா அரைசதம் அடித்தபின் ஒரு டி-ஷர்டை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 42-வது லீக் போட்டி இன்று (24.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக நிதிஷ் ரானா 81 ரன்களும் சுனில் நரேன் 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இதில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த வருட ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் எடுக்கப்பட்ட பந்துவீச்சாளரின் அதிகபட்ச விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் அரை சதம் அடித்தபின் கொல்கத்தா வீரர் ரானா,  ‘சுரிந்தர்’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கையில் ஏந்தி காட்டினார்.

அவர் எதற்காக காட்டினார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. சுரிந்தர் என்பவர் ரானாவின் மாமனார். இவர் நேற்று புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதையறிந்த ரானா தனது மாமனாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இப்படி அவரின் பெயர் பொறிக்கப்பட்ட ஷர்ட்டை கையில் ஏந்தியபடி காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்