இந்தியாவுக்கு ‘கீ ப்ளேயர்’ கிடைச்சிட்டாரு.. கோலியை இம்ப்ரஸ் பண்ணிய KKR வீரர்.. யாருன்னு தெரியுதா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை விராட் கோலி பாராட்டி பேசியுள்ளார்.
ஐபிஎல் (IPL) தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (RCB), இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஆண்ட்ரே ரசல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் எடுத்தனர். மேலும் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்த கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தியை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘நான் அவுட்டான பின்பு டக்அவுட்டில் அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது வருண் சக்கரவர்த்தி குறித்துதான் பேசிக்கொண்டு இருந்தோம். அவர் நிச்சயம் இந்திய அணிக்கு விளையாடும்போது முக்கிய வீரராக இருப்பார். அவரது பந்து வீச்சு அபாரமாக உள்ளது.
இளம் வீரர்கள் இதுபோல் விளையாடினால், இந்திய அணியின் பலம் அதிகமாகிவிடும். இனி வரும் காலங்களில் இந்திய அணியின் கீ ப்ளேயராக வருண் சக்கரவர்த்தி செயல்படுவார். இதுதான் அதற்கான அறிகுறி’ என விராட் கோலி கூறினார். இப்போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லையும், அதற்கு அடுத்த பந்திலேயே அறிமுக வீரர் ஹசரங்காவையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். இதுதான் போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொத்த டீமும் ‘சோகத்துல’ இருக்கு.. அங்க ‘ஒருத்தர்’ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க.. யாருப்பா அந்த ப்ளேயர்..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- பாவங்க மனுசன்.. ஐபிஎல்-ல அறிமுகமான ‘முதல்’ மேட்ச்லயே இப்படியா நடக்கணும்.. சோகமாக வெளியேறிய ‘RCB’ வீரர்..!
- எப்படி இருந்த மனுசன்.. உங்கள இப்படி பார்க்கவே ‘கஷ்டமாக’ இருக்கு.. நொறுங்கிப்போன ரசிகர்கள்..!
- VIDEO: இதுல யார் மேல தப்புன்னு தெரியலயே.. பிராவோவை கோபமாக திட்டிய தோனி.. அப்படி என்ன நடந்தது..?
- VIDEO: ‘அசுர வேகத்தில் அடித்த பந்து’!.. பாதியிலேயே வெளியேறிய ராயுடு.. என்ன ஆச்சு அவருக்கு..? வெளியான ‘X-Ray’ ரிப்போர்ட்..!
- 'நான் எதிர்பார்த்தது ஒண்ணு, ஆனா நடந்தது'?... 'அந்த பையன் வேற லெவல் சம்பவம் பண்ணிட்டான்'... போட்டிக்கு பின்பு மனம்திறந்த தோனி!
- VIDEO: எப்படிங்க மனுசன் இவ்ளோ கரெக்ட்டா கணிக்கிறாரு..! ‘இல்லவே இல்லைன்னு தலையாட்டிய அம்பயர்’.. சிரிச்சிக்கிட்டே ‘மாஸ்’ காட்டிய தோனி..!
- 'இந்தா ஆரம்பிச்சிட்டாருல'... 'ஐபிஎல் வந்தா போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது'... 'யார எங்க இறக்கணும் தெரியுமா'?... கொளுத்திப்போட்ட மஞ்ச்ரேக்கர்!
- VIDEO: நேத்து மேட்ச்சோட ‘ஹைலைட்டே’ இதுதான்.. கடைசி ஓவரின் கடைசி பந்தை இப்படி அடிப்பார்ன்னு பும்ராவே எதிர்பார்த்திருக்க மாட்டாரு..!
- 'மேட்ச் எவ்வளவு சீரியஸா போகுது'... 'இந்த நேரத்துல இஷான் இப்படி பண்ணலாமா'?... 'கடுப்பான சென்னை ரசிகர்கள்'... பதிலடி கொடுத்த மும்பை!