‘அன்னைக்கு அப்படி என்னதான் நடந்தது?’.. பரபரப்பாக்கிய ‘கோலி-பட்லர்’ மோதல் சர்ச்சை.. இங்கிலாந்து கேப்டன் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடைசி டி20 போட்டியில் ஜாஸ் பட்லருடன் விராட் கோலி சண்டையிட்டது குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில் இருந்தன.

இந்த நிலையில் கடைசி டி20 போட்டி கடந்த சனிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 80 ரன்களும், ரோஹித் ஷர்மா 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் தொடக்க வீரரான ஜேசன் ராய் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன்பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜாஸ் பட்லர்-டேவிட் மலன் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தது. இந்த கூட்டணியை புவனேஷ்வர் குமார் தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் பிரித்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை 188 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், ‘இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடுவதே தனி சிறப்பு தான். இந்திய அணி மிகசிறப்பாக விளையாடியது. இந்த வெற்றிக்கு இந்திய அணி முழு தகுதியானது தான். நாங்களும் இந்த தொடரிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது. இந்த தொடரில் எங்களுக்கு சாதகமாக நிறைய விசயங்கள் நடந்தது. ஆனால் நாங்கள் அதனை பயன்படுத்த தவறிவிட்டோம். வாய்ப்புகளை பயன்படுத்த எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தவறிவிட்டனர். பவர்ப்ளே ஓவர்களில் மிக சிறப்பாக பந்துவீசி எதிரணியை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே எங்களது பலம். ஆதில் ரஷித்துக்கு சில புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’ என தெரிவித்தார்.

அதேபோல் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் அவுட்டானதும், விராட் கோலி அவரை நோக்கி கோவமாக சென்றார். உடனே அம்பயர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். எதற்காக இருவரும் சண்டையிட்டனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் அப்போது போட்டியை பரபரப்பாக்கியது.

இருவருக்கும் இடையே அப்படி என்ன நடந்தது? என இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அங்கு என்ன நடந்தது எனக்கு சரியாக என தெரியவில்லை. சாதரணமாகவே, விராட் கோலி விளையாடும்போது ஆக்ரோஷமாக காணப்படுவார். போட்டி இறுக்கமாக இருக்கும் சில நேரங்களில் மோதல்கள் ஏற்படும். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்’ என இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்