"30 பால்-ல 80 ரன் அடிக்கனும்னா..அவராலதான் முடியும்" - ஹர்பஜன் ஓப்பன் டாக்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் தான் சமீபத்தில் அளித்த பேட்டியில் இஷான் கிஷனை புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில் இஷான் கிஷன் மிகப்பெரிய ஸ்டாராக வருவார் என்றும் அவரால் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை அடிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

"பக்காவான பிளான்.. வெறித்தனமான கேப்டன்ஷிப்" - ரோஹித் ஷர்மாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிளேயர்..!

இஷான் கிஷன்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த இஷான் கிஷனுக்கு கடந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதுவரையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் 5 T20 போட்டிகளிலும் இஷான் கிஷன் விளையாடி உள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஹர்பஜன் சிங்," நான் இஷான் கிஷனின் மிகப்பெரிய ஃபேன். அவரால் எந்த ஒரு நாளிலும் 30 பந்துகளில் 70-80 ரன்களை எடுக்க முடியும். அவர் வருங்காலத்தில் மிகச்சிறந்த வீரராக வருவார். அவருடைய திறமை மதிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர் இந்தியாவின் கேப்டன் கூட ஆகலாம். என்னைப் பொறுத்தவரையில் அவர் கேப்டன் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இஷானை ஏலத்தில் எடுத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை அளிக்கலாம் எனக் குறிப்பிட்ட ஹர்பஜன், மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மீண்டும் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றார்.

கடந்த ஐபிஎல் 2021 தொடரின் போதே, "அடுத்த ஆண்டு முதல் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் நீடிக்க மாட்டேன்" என விராட் கோலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

என் சாய்ஸ்

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பற்றி ஹர்பஜன் பேசுகையில்," கோலி கேப்டனாக தொடரவேண்டும். இன்னும் சில வருடங்களுக்கு இந்த சவாலான காரியத்தை அவர் செய்யத்தான் வேண்டும். இதற்கு இடையில் இளம் வீரர்களை பயிற்றுவித்து அடுத்த கேப்டனை உருவாக்கும் முயற்சியிலும் இறங்க வேண்டும். ஷ்ரேயாஸ் அய்யரும், இஷான் கிஷனும் என்னுடைய கேப்டன் பொறுப்பிற்கான சாய்சாக இருக்கும்" என்றார்.

40 சாட்டிலைட்டும் காலி.. விண்வெளியில் நடந்த சம்பவம்.. 750 கோடி நஷ்டத்தில் எலான் மஸ்க்..!

HE CAN HIT 70-80 RUNS OFF 30 BALLS, HARBHAJAN SINGH, INDIA STAR, BIG PLAYER, ஹர்பஜன் சிங், இஷான் கிஷன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்