"ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பீட்டர்சன் கூட சண்டை.." மரணமடைந்த ஆண்ட்ரு சைமண்ட்ஸ் பற்றி நெகிழ்ந்து பேசிய மேத்யூ ஹைடன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த  சுவாரஸ்யமான தருணங்களை மேத்யூ ஹைடன் ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | லட்டு மாதிரி கெடச்ச சான்ஸ்.. இப்படி மிஸ் பண்ணிட்டாரே.. கிரேட் எஸ்கேப் ஆன தவான்..!

ஆண்ட்ரு சைமண்ட்ஸ் கிரிக்கெட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக ஹைடன் கூறியுள்ளார்.

கார் விபத்தில் சனிக்கிழமை இரவு காலமான முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் அகால மறைவால்  கிரிக்கெட் உலகம் சோகத்தில் உள்ளது.

46 வயதான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான சைமண்ட்ஸ், உலகக் கோப்பைகளை (2003 மற்றும் 2007) வென்ற அணியில் இடம்பெற்றவர். அந்த காலகட்டத்தில் ODI மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியவர்.

சைமண்ட்ஸ் பெரும்பாலும் ஒரு நாள் போட்டிகளின் ஜாம்பவான் என்று கருதப்பட்டவர், ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக சில மறக்கமுடியாத போட்டிகளை விளையாடி உள்ளார்.

சைமண்ட்ஸ் உடன் ஆஸ்திரேலியா அணியில் இருந்த மேத்யூ ஹைடன், சைமண்ட்ஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து இரு சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அதில், "சைமண்ட்ஸ், MCG போட்டியில் என் மீது குதித்த தருணம் மறக்க முடியாதது, ஏனெனில் அவர் எப்போதும் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அறியப்பட விரும்பினார். பாக்சிங் டே டெஸ்டில் 90,000 பேர் முன்னிலையில் அவர் அந்த டெஸ்டில் வெற்றி ரன்களை அடித்த பின் என் மீது ஏறி குதித்தார். அந்த பொழுது தான், அவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோருக்கு சிறப்பான அங்கிகாரமிக்க தருணம்” என முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஹைடன் கூறினார்.

மேலும் பேசிய ஹைடன், சைமண்ட்ஸ் மற்றும் முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன் உடன் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோதலையும் விவரித்தார்.

"சைமண்ட்ஸ் MCG இல் பேட்டிங் செய்து கொண்டிருந்தார், கெவின் பீட்டர்சன் கவர் பாயிண்டிலிருந்து சைமண்ட்ஸ்க்கு வார்த்தைகள் மூலம் தொந்தரவு கொடுத்தார். சைமன்ட்ஸ் ஸ்டிரைக்கில் இருந்து வெளியேற சுமார் 20 பந்துகளை திண்றார், மேலும் சைமண்ட்ஸை தொடர்ந்து வம்பிழுத்த பீட்டர்சனுக்கு சைமண்ட்ஸ் பதிலடி கொடுத்தார்.  'கெவின், உங்கள் கையில் கடினமான ஸ்டிக்கர்கள் இருப்பதால் நீங்கள் கடினமானவர் என்று அர்த்தம் இல்லை," என்று சைமண்ட்ஸ் பீட்டர்சனிடம் கூறியதாக ஹைடன் கூறினார்.

அந்த ஆஷஸ் போட்டியில் சைமண்ட்ஸ் 156 ரன்களை எடுத்தார், மேலும் ஹைடனுடன் ஆறாவது விக்கெட்டுக்கு 279 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவை 84/5 இலிருந்து 363/6 என்று சரிவில் இருந்து மீட்டனர். ஹெய்டனும் தனது பங்கிற்கு அந்த போட்டியில் 150 ரன்களை நிறைவு செய்தார்.

அப்போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 99 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

CRICKET, ANDREW SYMONDS, KEVIN PIETERSEN, MATTHEW HAYDEN, ஆண்ட்ரு சைமண்ட்ஸ், மேத்யூ ஹைடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்