'என்ன ஜோக் காட்றீங்களா?.. கேன்சல் ஆன மேட்ச்சுக்கு... எங்களுக்கு பாயின்ட்ஸ் வேணும்'!.. பிசிசிஐ - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடையே கடும் மோதல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் யார் வெற்றியாளர் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (10.9.2021) மதியம் மான்செஸ்டரில் நடைபெறவிருந்தது. ஆனால், இந்திய அணியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்திய அணியில் முதலில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு உறுதியான கொரோனா தொற்று, பின்னர் பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், ஃபிசியோதெரபிஸ்ட் என அதிகரித்த வண்ணம் உள்ளது. வீரர்களுக்கு பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளபோதும் தொடர்ந்து குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். 

ஆபத்தை உணராமல் வீரர்களை விளையாட வைத்தால், பாதிப்பு அதிகரிக்கும் எனக்கூறி இந்த போட்டியில் இருந்து இந்திய அணி விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனவே, போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துவிட்டது. எனினும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.  

இந்நிலையில், இந்திய அணி, தான் வெளியேற விரும்பியதால், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக கருதி 2 - 2 என தொடர் சமன் அடைந்ததாக அறிவிக்க அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆனால் ரத்து செய்யப்படும் போட்டியில் எப்படி தோல்வி எனக்கூறுவீர்கள், எனவே இந்தியா தான் வெற்றி பெற்றது என பிசிசிஐ போர்க்கொடி தூக்கியுள்ளது. 

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயும் நடைபெற்ற நீண்ட நேர ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அலுவலகத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது 5வது டெஸ்ட் போட்டியை ஐபிஎல், டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு வேறு ஒருநாளில் நடத்தி முடித்துக்கொள்ளலாம் என்றும், அதுவரை இந்த தொடர் முடிவு எட்டப்படாததாகவே இருக்கட்டும் எனவும் பிசிசிஐ தரப்பில் பேசியுள்ளதாக தெரிகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்